பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பொழுது புலர்ந்தது

துக்கு அதிகமான வருத்தத்தைத் தருகிறது. இந்தியர் களுடைய அபிலாஷைகளைக் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இதுவா பிரிட்டன் நியாயத்துக்காகப் போர் செய்வதாகப் பறைசாற்றுவதன் கருத்து?” என்று கூறினர்.

காங்கிரஸ் கமிட்டியார் தமக்குக் கண்ணுக்குக் கண்ணுயுள்ள காந்தியடிகளையும் விட்டுப் பிரிந்து இருபது வருஷமாய்ப் போற்றிவந்த அஹிம்சா தர்மக் கொடியை யும் சற்றுத் தாழ்த்திக்கொண்டு, பிரிட்டனுடைய கஷ்ட காலத்தில் உதவி செய்ய ஆத்திரப்பட்டதற்கு இதுவா பதில் ? பண்டித நேருவுக்கு இதைச் சகிக்க முடியவில்லை. “இனி என்ன யோசனை ? காங்கிரஸ் போர் தொடுக்க வேண்டியதுதான். இனி மேலும் சமரசம் பேச முடி யாது. இப்படித்தான் வகுப்புவாதிகள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் ‘ என்று கூறினர்.

வைவிராய் ஆகஸ்டுமாதம் 8-ம்தேதி அறிக்கை வெளி யிட்டார். இந்தியா மந்திரி 14-ம்தேதி அந்த அறிக்கைக்கு பார்லிமெண்டு சபையில் வியாக்கியானம் செய்தார்.

இந்தியாவில் பல வேற்றுமைகள் இருக்கும்பொழுது எப்படிப் பூரண சுதந்திரம் அளிப்பதாக கூறமுடியும்? மத்திய சட்டசபைக்கு ஜவாப்தாரியான கிர்வாகசபை ஏற்படுத்தும்படி கூறுகிறார்களே, அப்படியால்ை அரசி யல் சட்டத்தையே மாற்றவேண்டுமே, அது எப்படி யுத்தத்தின் மத்தியில் சாத்தியமாகும் ?-என்று கூறினர். வேற்றுமை-வேற்றுமை என்பது நாம் முன்னலேயே கண்ட பழய விஷயம்தான். ஆயினும் இந்தச் சமயத்தில் ராஜாஜி, வேற்றுமை மறைந்தால் அடுத்த நிமிஷமே பூரண சுதந்திரம் வழங்குவதாகச் சர்க்கார் கூறுவது உண்மைதான என்று பரிசோதிக்கும் பொருட்டு