பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புல ர் ந் த து

- =

நமது நிலைமை

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் படை எடுத்து வந்த அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தி “ பொன் மயமான பூமி” என்று புகழ்ந்த நமது பரத கண்டம்-சந்திரகுப்த சக்ரவர்த்தி காலத்திலிருந்த மெகாஸ்தனிஸ் என்னும் அறிஞன் “ இரவில் தாழ்போடாமல் உறங்கும் நாடு ‘ என்று சிறப்பித்த பாரத தேசம் - இளங்கோவடிகள் என்னும் கவிஞர் பெருமான் “ முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா வளத்தது” என்று போற்றிய இந்திய நிலம் இப்பொழுதுள்ள நிலை என்ன ?

டாக்டர் ஜயக்கர் கூறுவதுபோல சகல தேசங்களுக் கும் பின்னல் பரமதரித்திரமான ‘ பாப்பராக” நிற்பதும், சமீபத்தில் வந்துபோன ஆங்கில விஞ்ஞான பண்டிதர் ஹில் என்பவர் கூறுவதுபோல இந்திய மகாஜனங்கள் 40 கோடியில் 20 கோடிப் பேர் போதுமான உணவில்லா மலும் அநேகர் பட்டினியாகவும் மிருகங்களிலும் கேவல மாக இருப்பதுமே நமது கிலேமை.

ஏழு வருஷ காலமாக இந்தியாவில் ஆட்சிபுரிந்து விட்டு இப்பொழுது இங்கிலாந்து சென்றுள்ள லின் லித்கோ பிரபு அங்கே ஜனங்கள் பெருகாமல் ஜனன விகிதம் குறைந்து வருவது கண்டு வருந்தி அதை நிவர்த் திப்பதற்கான மார்க்கங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிரு ராம்.

563–1