பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 எனவே விடுதலைப் போரினின்றும் பிரித்து பாரதியைக் காண்பது நீரினின்றும் பிரித்து மீனைக் காண்பது போன்றதே. அங்ங்ணம் பிரித்துக் காண முற்படுவோரி பாரதியை அறிய இயலாதாரே. அவர் பாரதியைக் காணல் அரிது! அரிது! ஒரு சமுதாயம் முன்னேற்றப் பாதையிலே செல்ல வேண்டுமாயின் அது போராட்டத்தின் மூலமே இயலும். போராட்டம் ஒன்றே ஒரு சமுதாயத்தை முற்போக்கில் உந்திச் செலுத்துவது. இந்த இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலே இந்திய சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு உந்திதி தள்ளியது நமது விடுதலைப் போராட்டமே. அந்தப் போராட்ட அணியின் தலைமையிலே பாண்டு வாத்தியத்துடன் முழங்கிக் கொண்டு அணி திரட்டிச் சென்ற மாபெருங்கவி பாரதி; இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு முழங்கிய முற்போக்குக் கவி. இந்தக் கண்ணுேட்டமே இந்தப் புத்தகம் எழுத என்னை உந்தியது. முற்போக்குப் பாதையிலே அணிவகுத்து நடப்போர் பலரும் இதனை வரவேற்பர் என்றே கருதுகிறேன். எனது கண்ணுேட்டத்திலே குறை காணப்படின் அஃது எனது குறையே: அக் குறையை "நிறையாக்க வம்மின்" என்று அழைக் கிறேன். இந்தப் புத்தகத்தைச் சீரிய முறையில் வெளிக் கொணர்ந்துள்ள பாரிநிலைய உரிமையாளர் திரு. செல்லப்பன் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள் ளேன். நன்றி! நன்றி! - - சக்திதாசன் சுப்பிரமணியன்