பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 இன்னின்ன காரியங்களைச் செய்தே தீரவேண்டும் என்று ஏதேனும் பலவந்தமுண்டா? மிஸ்டர் மார்லி இந்தியா மந்திரியாக நியமிக்கப்பட்டபோது மகிழ்ச்சி கொண் டாடும் பொருட்டாக நடந்த சபையின் காரியங்களைப் படித்தபோதே எனக்கு ந ைக ப்பு உண்டாயிற்று, மார்லியின் புஸ்தகங்களில் இருந்து வாக்கியங்கள் எடுத்துப் படித்தார்கள்' 'கிளாட்ஸ்டனுடைய சரித்திரம் எழுதி யிருப்பதில் மார்லி இன்னின்னவாறு சொல்லியிருக்கிரு.ர். அந்த சமயத்தில் இப்படிச் சொன்னர், இந்த சமயத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிருர். 30 வருஷத்திற்கு முன்பு மிஸ்டர் மார்லி ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அப்போது இன்னின்னபடி எழுதியிருக்கிரு.ர்." என்றெல் லாம் மேற்கோள் காட்டினர்கள். இதைக் காட்டிலும் பகவத்கீதையிலிருந்து இவ்வாறு சில வாக்கியங்கள் எடுத்து மேற்கோள் விட்டிருந்தால் விசேஷமாயிராதா என்று நான் யோசித்தேன். மேலே குறிப்பிட்ட மனிதர்கள் இடத்திலெல்லாம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. ஆனல் இப்போது சொல்லுகிறதென்ன வென்ருல் மேற்படி மனிதர்கள் நமது விவகாரத்தின் ஸ்திதியை சரியாக அறியவில்லை, அல்லது அவர்கள் தத்துவ ஞானிக்கும் ராஜதந்திரிக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டென்பதை மறந்து விட்டார்கள். ஓர் ராஜ தந்திரி தற்கால செளகரியங்களை மட்டுமே கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிருன். எவ்விதமான மாறுபாடுகள் கட்டாயம் செய்து தீரவேண்டுமென்பதையே அவன் யோசிக்கிருன். ஆத்மார்த்தமாக எது செய்யவேண்டியது? எது தர்மம், எது அதர்மம்?' என்பதை அவன் யோசிக்க வில்லை. மேலும் அவன் இரண்டு கட்சிகளையும் யோசிக்க வேண்டியவகை யிருக்கிருன். ஆங்கிலோ இந்தியர்களுக்கு இந்திய விவகாரத்தில் மிகுந்த சிரத்தை இந்தியுா