பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 அனுகூலத்தை இழக்க நிச்சயித்த மூடனை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? நான் அவ்வித பிரசங்கத்தை கேட்கும் பொழுது பிரசங்கம் மிக நேர்த்தியாயிருக்கிற தென்று சொல்வேனே யொழிய, நான் சுயநன்மை இழக்கவே மாட்டேன். ஒரு திருஷ்டாந்தம் சொல்லு கிறேன் கேளுங்கள். இங்கிலாந்திலே பிரசங்கங்கள் செய்யப் போயிருந்த என் சினேகிதர் ஒருவர் இந்தியாவின் குறை களைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தார். அப்பொழுது சபை யிலிருந்த ஒரு மனிதன் இவரிடம் வந்து "ஐயா உங்கள் தேசத்திலே எத்தனை மனிதர்கள் இருக்கிரு.ர்கள்?' என்று கேட்டான். இவர் 30 கோடி மனிதர்கள் என்று சொன்னர். உடனே அவன் இவ்வளவு ஜனங்களிருந்தும் உங்கள் குறைகளை நீங்களே தவிர்த்துக் கொள்ள முடியாத விஷயத்தில், நீங்கள் எதற்கும் தகுதியுடையவர்களில்லை. உங்கள் விஷயத்கில் இரக்கப்படவே கூடாது' என்று மறு மொழி சொன்னன். ஒர் ஆங்கிலேய தொழிலாளி நமது விவகாரத்தை கவனிக்கும் மாதிரி இதுவேயாகும். தொழில் கட்சியினல் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படலா மென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். தொழிற்கட்சியார் தாமே பல குறைகளின் கீழ் அவதிப்படுகிருர்கள். ஆனல் அவர்கள் அதிகாரம் பெற்றபோதிலும் கூட உங்களை இப்போதைக்காட்டினும் அனுகூலமாக நடத்தப் போவ தில்லை. இப்போதைக் காட்டிலும் இழிவாகவே நடத்து வார்கள். ஏனென்ருல் பிரிட்டிஷ் தொழிலாளிகள் நமக்கு சாமான்கள் அனுப்பி ஜீவனம் செய்கிருர்கள். இதுதான் வாஸ்தவமான நிலை. இது ஜனங்களுக்கு மெல்ல மெல்ல தெரிந்து வருகிறது. பூரீகோக்கலேயைப் போன்ற வாலிபர்கள் இன்னும் நம்பிக்கை இழந்து விடாமலிருக் கிருர்கள். எனினும், இவருடனே சென்ற 6ösrosy லஜபதிராய் போன்றவர்கள் இவரைப் போலில்லை, நான்