பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விட்டீர்கள். அந்த சாஸனம் எந்த நிலைமையில் பிரசு ரிக்கப்பட்டதேர் அந்த நிலைமை மாறிப் போய்விட்டது. மகாராணியால் உங்க ளு க் கு அளிக்கபட்ட ஒரு வாக்குறுதியை வற்புறுத்துவதற்கு நீங்கள் பலமில்லாத வர்களாய்ப் போய்விட்டீர்கள். இராணியின் சாஸனம் ஊர்ஜிதத்திற்கு வராததின் காரணம் இதுவேயாகும். எனவே காலக்கிரமத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தலைக்கு மிஞ்சிப் போய் விட்டார்கள். மகாராணியின் சாஸனத் தின்படி நடத்தல் அஸாத்தியமாகும்படியாக ஒருவித அரசியல் ஏற்படுத்தி விட்டார்கள். லார்டு கர்ஸன் மகாராணியின் சாஸனத்தைக் கேலி பண்ணினர். மற்றுமொரு லாயர் அந்த விளம்பரம் பார்லிமெண்டாரால் அனுமதி செய்யப் படாமையால் அது சட்ட அமைப்புக்கு உட்பட்டதில்லையென்று கூறிவிட்டார். அந்த வக்கீலின் பெயர் ஸர் ஜேம்ஸ் ஸ்டீபன் (Sir James Stephen) இது. @áurt - loGærrør (libert Bill) காலத்தில் நடந்த விஷயம். இப்பொழுது அவர்கள் மகாராணி சாஸனத் திற்கு தப்பர்த்தம் சொல்லிக் கழித்து விட்டு விடப் பார்க்கிருர்கள். அவர்கள் முகாந்திரம் சொல்லிக் கழிக்க முயலுவது நமக்குப் பெரிய காரியமில்லை. அந்த சாஸனத் தின் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றும்படி யெவ்வாறு பலவந்தம் செய்ய முடியுமென்பதே பெரிய காரியம். இதுதான் இப்போது விவகாரத்திலிருக்கிற விஷயம். நாம் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நாம் கேட்பதை அவர்கள் மறுக்கத்துணியார்கள் என்ற நிலையில் நம்முடைய மனதை உறுதி செய்துகொண்டு கேட்க வேண்டும். கேட்பதற்கும் கெஞ்சுவதற்கும் மிகுந்த வித்தி யாஸ்மிருக்கிறது. அனுமதிப் பிராய மசோதா (Age of consent), நிலத் தீர்வை (Land Tax). குடியானவர் விஷயம்