பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#60 'காங்கிரஸ் சபையில் உமக்குப் பிரியம் அதிகமா யிருந்தது. அதை ஒர் ஆலயம்போல் கருதினர். அதன் மூலமாகத் தற்கால ஆட்சி முறையைப் பெரிதும் மாற்றி நாட்டுக்கு எண்ணிறந்த நன்மைகள் விளையலாம் என்று நம்பியிருந்தீர். 'இப்படிப்பட்ட சபையின் ஒற்றுமைக்கு இடையூரு யிருந்தது பற்றி நீர் நெடுங்காலமாக மகா பண்டித ரென்றும், ஞானியென்றும் பாராட்டி வந்த திலகரையும் அவர் கூட்டத்தாரையும் காங்கிரஸ் சபையினின்றும் விலக்கிவிட முயன்றீர். அந்த முயற்சி கைகூடி விட்டதாக வும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர். நல்லது, நீர் அந்தக் காங்கிரஸ் கூட்டத்தில் இருக்கிறீரா? இனி நீர் காங்கிரஸ் சபைக்குப் போகலாமா? அப்போது காங்கிரஸ் ஒர் ஆலயம் போன்றது. என்னவாயினும், எவ்வளவு தேசாபிமானிகளை எதிர்த்தும் நாம் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிச்சயத்துடன் இருந்தீர். ஐயோ! இரண்டு வருஷங்கூட ஆகவில்லையே! அதற்குள் காங்கிரஸ் சபை கள்ளுக்கடைபோல் நிஷித்தமானது, அதில் காலை எடுத்து வைக்கலாகாது என்று சொல்லும் கூட்டத் தாருடன் சேர்ந்து விட்டீர். இனிக் காங்கிரஸ் சபையில் போய் வெளிச்சம் நல்லது. ஆனால் பிரகாசம் கெட்டது என்று சொல்வதுபோல் சுதேசியம் நல்லது, அல்லது அந்நிய வஸ்து பகிஷ்காரம் கெட்டது எ ன் று சொல்லுவீரா? 'திலகர் கூட்டத்தார் காங்கிரஸ் சபையில் இருக்க லாகாது என்று கூத்தாடினிரே! நீர் இப்போது காங்கிரஸ் சபையில் இருக்கலாமா? காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படியாயிற்று? சொல்லுகிறேன் கேட்கிறீரா? வஞ்சனைநடிப்பு- பாவனை- ஏமாற்று- வேஷம்-பொய்.