பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புதுவை ஈசுவரன் தர்மராஜா கோவில் தெருவில் ஒரு வீடு. மிக வசதியான வீடு. அந்த வீட்டில்தான் பாரதியார் குடியிருந்தார். அந்த வீட்டின் சொந்தக்காரர் சபாபதி செட்டியார் என்பவர்; பாரதியாரிடம் பற்றுடைய வர்: மரியாதையுடையவர்; பாரதியின் கவிதையிலே பெரிதும் ஈடுபட்டவர். விளக்கெண்ணெய் செட்டியார் என்று அவருக்குப் பெயர் வைத்திருந்தார் பாரதியார். ஏன் தெரியுமா? பாரதியாரிடம் கண்டிப்பாக வாடகை கேட்கமாட்டார். வழ வழ: என்று போய்விடுவார்: தழுவி விடுவார் எனலாம். அதனலே அவருக்கு விளக் கெண்ணெய் செட்டியார் என்று பெயர் வைத்திருந்தார் பாரதியார். ஒருநாள். பாரதியார் மாடியில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது பாரதியாரைக் காண வந்தார் செட்டியார். பாரதியின் மனைவி மாடிக்குச் சென்ருர். 'செட்டியார் வருகிருர்" என்ருர், "யார்? விளக்கெண்ணெய்தானே' என்று கேட்டார் பாரதியார். "ஆம்" என்ற பதில் வந்தது. சில நிமிஷங்கள் பேசாதிருந்தாரி பாரதியார். பிறகு சொன்னர்: "செட்டியாருக்குப் பணம் கொடுக்க வேண்டும். நாலுமாதமாக வாடகை கொடுக்கவில்லை. மிகவும் மரியாதையுள்ளவர் செட்டியாt; ஆகவே, நெருக்கவில்லை. ஆலுைம் நாம் சீக்கிரம் கொடுத்துவிட வேண்டும். பணம் வரவில்லையே! அவர் ரொம்பப் பொறுமையுடையவர். பொறுமை எல்லாருக்கும் கிடைக்குமா? தெய்வத்தினும்