பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.1% அத்தகைய உணர்ச்சியை உண்டு பண்ணிய பாடல் இது. நம்முடைய விடுதலைப் போரில் மட்டும் பாரதியார் கருத்துச் செலுத்தினர் என்று கருதல் வேண்டாம். பிற நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகளையும் கண்டார்; கவனித்தார்; அவற்றுடன் தோழமை பூண்டார்: தமது பத்திரிகையில் எழுதினர். எகிப்து நாட்டின் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் முஸ்தாபா கமால் பாஷா என்பவர். லண்டன் நகரில் வசித்த நமது இந்திய தேசாபி மானிகளுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தனர் அயர்லந்து தேசாபிமானிகள். "சென்ற ஜூலை மாதம் 24ந் தேதி லண்டன் இஸ்லாமிய சங்கத்தார், முஸ்தாபா பாஷாவிற்கு விருந் தளித்து உப ச ர ன க ள் செய்தார்கள். லண்டன் வந்திருக்கும் இந்தத் தேச பக்த சிரோமணி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாரின் குறைகளை எடுத்துக் கூறுவதில் சிறி தேனும் அச்சமற்றவர். ஈஜிப்டு நாடு சுயாதீனம் பெற வேண்டும் என்பதில் இவருக்குள்ள ஆர்வம் வரம் பற்றது.......இந்திய மீட்டிங்கில் அநேக இந்திய மாதர் களும் கனவான்களும் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் பாரத கண்டத்தின் உத்தம புத்திரராகிய சியாம்ஷி கிருஷ்ணவர்மா மேற்படி ஈஜிப்டிய தேசபக்தர் விஷயத்தில் தமக்குள்ள பெருமதிப்பைப் பற்றிப் பேசினர். சுயா தீனத்தின் மகிமையைப் பற்றி கிருஷ்ணவர்மா பேசிய போது, கேட்போருக்கெல்லாம். மயிர்க் கூச்சலுண்டாகும் படியாக இருந்தது. "யுத்தம் கூடாது. அமைதிவேண்டியது தான். அது அடிமைத் தன்மையுடன் கூடிய பேடி அமைதி யாக இருக்கக் கூடாது. சுயாதீனத்துடன் கலந்ததாக