பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£13 இருக்க வேண்டும். சுயாதீனத்தை இழப்பதைக் காட்டிலும் மரணமே விசேஷமானது" என்று கிருஷ்ணவர்மா சொன்ஞர். கிருஷ்ணவர்மாவின் பிரசங்கத்தைக் கேட்ட உடனே கனம் தங்கிய முஸ்தாபா பாஷா மகா சந்தோஷ மடைந்து, உடனே எழுந்து வந்து கிருஷ்ணவர்மாவுடன் கை குலுக்கி அன்பு பாராட்டினர். சுயாதீன தேவதையின் தொண்டர்களாகிய இவ்விரண்டு மகான்களும் கை குலுக்கியபோது சபையோர் பேரானந்தம் அடைந் தார்கள்." (இந்தியா 18-8-1906) ஆயிரத்துத் தொளாயிரத்து ஆரும் ஆண்டிலே, ருஷ்யாவைப் பற்றி ஐந்து கட்டுரைகள் எழுதினர் பாரதி யார். இவை ஐந்தும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த கட்டுரைகள் ஆகும். "ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து, கொடுங்கோன்மை துண்டு துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை." (இந்தியா-30-6-1906) 'ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மீது அரசேற்றும் கடுவாய் அரசனும், அவனது ஓநாய் மந்திரிகளும், நெடுங் காலம் தரித்திருக்க மாட்டார்கள். இவர்களின் இறுதிக் காலம் வெகு சமீபமாக நெருங்கி விட்டதென்பதற்கு தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன. நீதி ஸ்வரூபி யாகிய சர்வேசனது உலகத்திலே அநீதியும் ருஷ்ய ஒநாய் தன்மைகளும் நிலைக்கமாட்டா." (இந்தியா-21-7-1906) "இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்கரவர்த்தியின் சிங்காதனம் இது வரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை புலமாக