பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 சும்மா இரா என்றுணர்ந்தார். ருஷ்யப் புரட்சியின் எதிரொலி, ஏனைய ஆசிய நாடுகளிலும் கேட்கும் என்றுணர்ந்தார். இந்திய நாடு விரைவில் விடுதலை பெறுதல் உறுதி என்று கண்டார். விடுதலை விடுதலை விடுதலை என்று முழங்கினர். ஏழையென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை -ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இக்தியாவில் இல்லையே. இவ்வாறு விடுதலைப் போர் முரக கொட்டினர். விடுதலை பெற்ற இந்திய சமுதாயம் எப்படியிருக்க வேண்டும்? பாரதி பாடுகிரு.ர். முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை மேற் கூறிய பாடல் முற்றும் படித்துப் பாருங்கள். இந்தக் கருத்து எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு ருஷ்யாவிலே நடந்த புரட்சிதான் பாரதிக்கு இக்கருத்தை வழங்கியது எனலாம். பொதுவுடைமையிலே உளம் பற்றிய பாரதி வேறு எவ்விதப் பாடல் பாட வல்லார்? பாரத சமுதாயம் பொது வுடைமை சமுதாயமாக மலர்தல் வேண்டும் என்று அவர் பாடியதில் வியப்பு ஏது? எதுவுமில்லை.