பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 பார்ம்' என்பது என்ன? பார்ம்' என்ருல் வடிவு, அமைப்பு என்று பொருள். வடிவு யாது? அமைப்பு யாது? பாரதி பாடல்களின் வடிவம் யாவும் பழையனவே. பாட்டின் அமைப்பு பழைய அமைப்புதான். நொண்டிச்சிந்து, ஒருவகைப் பாடல் வடிவம்: அமைப்பு. இது புதியதா? இல்லை. வடிவம் பழைய ஒன்றுதான். இந்த வடிவத்தையே அவர் பல பாடல்களில் அமைத்திருக்கிரு.ர். நெஞ்சு பொறுக்குதில்லையே!-இந்த கிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் இது நொண்டிச் சிந்து. ஆனால் இந்த சிந்தின் கண்டென்ட்" என்ன? அதாவது சிந்திலே பாடப்படும் பொருள் என்ன? பாடப் படும் பொருள் புதிது. சிந்து பழையது; சிந்திலே கூறப்படும் பொருள் புதிது. இதே மாதிரி கும்மியை எடுத்துக் கொள்வோம். 'கும்மி எனப்படும் பாடல் அமைப்பு பழைய ஒன்றே. ஆனால், பாரதியார் அந்தப் பழைய கும்மி மூலம் புதிய கருத்தைச் சொல்கிருt. அதுவே பெண்கள் விடுதலைக் கும்.மி.” கும்.மியடி தமிழ் காடு முழுதுங் குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி பாடல் வடிவம் என்னவோ பழைமையானதுதான். ஆனால், அதிலே சொல்லப்படும் கருத்து புதியது. பார்ம்' பழையது: "கண்டெண்ட்’ புதியது. ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் இந்தப் பாடல் வடிவமும் பழைய ஒன்றே.