பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பாரதி. புதுச்சேரியில் இருந்த தம் நண்பர் குழாத்திற்குப் படித்துக் காட்டினர். கதை கேட்டதும் எல்லோரும் குலுங்க குலுங்கச் சிரித்தனர். அப்போது அவர் வீட்டில் முருகேசன் என்ருெரு சிறுவன் எடுபிடி வேலைக்காரளுக இருந்தான். ஒரு நாள் முருகேசன் மாயமாய் மறைந்தான். "சின்னச் சங்கரன் கதை"யின் கையெழுத்துப் பிரதியும் எங்கோ போய்விட்டது. நண்பர்கள் வற்புறுத்தவே மீண்டு மொரு முறை பாரதி அதே கதையை எழுதினர். ஞான பாது'வில் அது வெளிவந்தது. அந்தக் கதை இதோ. சின்னச் சங்கரன் கதை நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடி தொடங்கிக் கதா நாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக்கொண்டு போவது வழக்கம். நவீன ஐரோப்பிய கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போலவே கதையை நட்ட நடுவில் தொடங்குகிருர்கள். பிறகு, போகப் போகக் கதாநாயக னுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டே போகும். எங்கேனும் ஒரு காட்டில், ஒரு குளக்கரையில், ஒரு தனி மேடையில் இவன் தனது காதலியுடன் இருப்பான். அப்போது கதையின் ஆரம்பங்களை எடுத்து விரிப்பான். இது அவர்களுடைய வழி. நான் இக் கதையிலே மேற்படி இரண்டு வழிகளையும் கலந்து வேலை செய்யப் போகிறேன். சின்னச் சங்கரன்நம்முடைய கதாநாயகன் விருத்தாத்தங்களை மாத்திரம் பூர்வத்திலிருந்து கிரமமாகச் சொல்லிவிட்டுக் கதையில் வரும் மற்றவர்கள் விஷயத்திலே கொஞ்சம் ஐரோப்பிய