பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவு பெருத கதை பாரதியின் பெயரால் வெளிவந்துள்ள கட்டுரைகள் பல. கதைகளும் உள். இவை யாவும் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதியவைதான? ஐயம். இந்த ஐயப் பாட்டுக்குக் காரணம் என்ன? வரகவி அ. சுப்பிரமணிய பாரதி என்ற பெயர் கொண்டவர் ஒருவரும் இருந்தார். அவரை நான் கண்டிருக்கிறேன்: பேசியதும் உண்டு. அந்தக் காலத்தில் அவரும் சுதேசமித்திரனுக்குக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார். எனவே, பெயர் கண்டு எல்லாம் மகாகவி பாரதி எழுதியவையே என்று முடிவு செய்வது சரியாகுமா? யோசித்தல் வேண்டும். பாரதியின் கதைகளில் முற்றுப் பெருதவை இரண்டு. ஒன்று சின்னச் சங்கரன் கதை." மற்ருென்று 'சந்திரி கையின் கதை" "சின்னச் சங்கரன் கதை' சுப்ரமண்ய சிவாவின் பத்திரிகையான ஞான பாது'வில் வெளிவந்தது. ஆருவது அத்தியாயத்திற்கு மேல் தொடரவில்லை. சின்னச் சங்கரன் கதையைப் பற்றிய குட்டிக் கதை யொன்றுண்டு. சின்னச் சங்கரன் கதையை எழுதினர்