பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 வழியைத் தழுவிக்கொண்டு செல்லக் கருதுகிறேன். சர்வ கலாநிதியாகிய சரஸ்வதி தேவி எனது நூலில் கடைக்கண் வைத்திடுக. பிஞ்சிலே பழுத்தது சின்னச் சங்கரன் பிஞ்சிலே பழுத்துவிட்டான். நம்முடைய கதாநாயகனுடைய பெயர் அத்தனை நயமில்லை என்றும், கொஞ்சம் கவுரவக் குறைவாக இருக் கிறது என்றும், எவரும் கவயுைறலாகாது. போகப் போக இந்தப் பெயர் மாறிக்கொண்டே போகும். கடைசியில் படிப்பவர்கள் பயப்படும்படி அத்தனே படாடோபமாக முடியும்படி ஏற்பாடு செய்கிறேன். சின்னச் சங்கரன், சங்கரன், சங்கரய்யர், சங்கர நாராயண அய்யர், சங்கர நாராயண பாரதியார் இத்யாதி, இத்யாதி. சின்னசி சங்கரன் கவுண்டனூர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே மூன்ருவது வகுப்பில் படிக்கிருன். அந்தக் காலத்தில் இதை "மிடில் ஸ்கூல் என்பார்கள். பையனுக்கு வயது பன்னிரண்டு அல்லது பதின்மூன்று இருக்கும். இதற்குள் தமிழில் புலவராய் விட்டான். கவுண்டனூரில் ஜலம் குறைவு; பணம் குறைவு; நெல் விளைவு கிடையாது; வாழை தென்னை, மா, பலா இவையெல்லாம் வெகு துர்லடம்; பூக்கள் மிகவும் குறைவு; புலவர்களுக்கு மாத்திரம் குறை வில்லை. அந்தச் சரக்கு மலிவு. தமிழில் சங்கரன் பலபல நூல்கள் பல பல காவியங்கள் படித்து முடித்திருந்தான். இவை பெரும்பாலும் சிங்கார ரஸம் மிகுந்திருப்பன. இந்த ஜாதிக் காவியங்கள்தான் சங்கரனுக்கும் பிடிக்கும். கவுண்டனூர் புலவர்கள் எல்லோருக்கும் இப்படியேதான். மன்மத விகாரத்தைப் புகழ்ந்து பேசியிருக்கும் நூல்களும் தனிப்பாடல்களும் அவ்வூரிலே வெகு சாதாரணம். சங்கர னுக்கும் இவை வெகு சாதாரணமாயின. 'பாஷைகளிலே 15