பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 களுக்கு வயது கமார் ஐம்பதிருக்கும். நல்ல கருநிறம். நரை பாய்ந்த மீசை, கிருதா. முன்புறம் நன்முகப் பளிங்கு போல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் தவடு பாய்ந்து, பின் புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்துாரம் குழிந்த கண்கள், இமைப் புறங்களில் 'காக்கைகால் அடையாளங்கள். பொடியினல் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினலும் புகையிலைச் சாற்றிலுைம் அலங்கரிக்கப்பட்ட பற்கள், குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள், பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளாஞ்சி. ஒரு அடைப்பைக்காரன்இதுதான் ரங்க்சாமிக் கவுண்டர். இவர் காலையில் எழுந்தால், இரவில் நித்திரை போகும்வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின்வருமாறு: காலை எட்டு அல்லது எட்டரைமணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டு ஒன்பது மணி யானவுடன் பழையது சாப்பிட உ ட் கா ரு வாரி. பழையதிற்குத் தொட்டுக் கொள்ளத் தமது அரண்மனை யிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளி லிருந்து பழங்கறிகள் கொண்டுவரச் சொல்லி வெகு ரஸ்மாக உண்பார். (அதாவது காலை லேகியம் முடிந்த பிறகு. இந்த அபினி லேகியம் உருட்டிப் போட்டுக் கொள் ளாமல் ஒரு காரியங்கூடத் தொடங்க மாட்டார்; பார்ப் பார் எடுத்ததற்கெல்லாம் ஆசமனம் செய்யத் தவருது இருப்பது போல.) பழையது முடிந்தவுடன் அந்தப் புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபாமண்டபத் தருகேயுள்ள ஒரு கூடத்தில் நாற்காலியின் மீது வந்து படுத்துக் கொள்வார். ஒருவன் கால்களிரண்டையும்