பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 தமிழ் பாடம் வரும்போது மாத்திரம் கொஞ்சம் கவனிப்பான். அதிற்கூட இலக்கணம் தடவும். இவனுடைய தகப்பனரின் மதிப்பையும், ராமசாமி கவுண்டர் இவனிடம் தயவு பாராட்டுகிருரென்பதையும் உத்தேசித்து உபாத்திமார் இவனை அதிகமாக அடித்துக் கொல்வதில்லை. ‘இவன் கடைசிவரை உருப்படமாட்டான்' என்பது அவர்களுடைய முடிவு. ஊரிலுள்ள பெண்குட்டிகள் எல்லாம் 'சங்கரன் அப்பாவி" என்று சொல்லும். இவ்வாறு அவரவர் தத்தமக்கு ஒத்தபடி நினைத்துக்கொண்டு சங்கரன் பிரத்யேகமாக ஒரு வகையில் முதிர்ந்து வருகிருன். எல்லார் விஷயமும் இப்படியேதான். ஒருவனுடைய உள்ளியல்பை மற்ருெருவன் முழு வ து ம் அறிந்து கொள்ளுதல் எக்காலத்திலும் சாத்தியமில்லை. அவனவனு டைய இயல்பு அவனவனுக்கே தெளிவாகத் தெரியாது. பிறனுக்கு எப்படி விளங்கும்? பிள்ளைகளையும் பெண்களையும் பற்றி, தாய் தகப்பன் மார் கொண்டிருக்கும் எண்ணம் பெரும்பாலும் தப்பாகவே யிருக்கும். குழந்தைகளின் அறிவும் இயல்பும் எவ்வளவு சீக்கிரத்தில் மாறிச் செல்கின்றன வென்பதைப் பெற்ருேர் அறிவதில்லை. பாப்பா, பாப்பா' என்று நினைத்துக் கொண்டே இருக்கிரு.ர்கள். பதினறு பதினேழு வயதாகும் போது, "அப்பப்பா; அப்பப்பா!' என்கிரு.ர்கள். ரங்கசாமிக் கவுண்டர் திருச்சபை. மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜபூரீ ராஜமார்த் தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிய ராமசாமிக் கவுண்டரவர்