பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 பிடித்துக் கொண்டு இருப்பான். இவர் வெற்றிலபோட்டு காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார். எதிரே ஆராவது உத்தியோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர்ப் பிரபுக்கள், இவர்களில் ஒருவன் வந்து கதை, புரளி, கோள்வார்த்தை, ஊர்வம்பு, ராஜாங்க விவகாரங்கள், ஏதேனும்- பேசிக்கொண்டிருப்பான். சில நாட்களிலே வெளிமுற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும். வெளி ஊரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச்சேவல் கொண்டு வருவான். அரமனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டைவிட்டுப் பார்ப்பார்கள். அரமனைச் சேவல் எதிரியை நல்ல அடிகள் அடிக்கும்போது, ஜமீந்தாரவர்கள், நிஷ்பrபாதமாக இரு பக்கத்துக் கோழிகளின் தாய், பாட்டி, அக்காள், தங்கை எல்லோரை யும் வாய் குளிர வைது சந்தோஷம் பாராட்டுவார். களத் திலே ஆரவாரமும், கூ க் கு ர லு ம், நீசபாஷையும் பொறுக்க முடியாமலிருக்கும். . பெரும்பாலும், சண்டை முடிவிலே அரமனைக் கோழிதான் தோற்றுப்போவது வழக்கம். அங்ங்னம் முடியும்போது, வந்த கவுண்டன் தனது வெற்றிச் சேவலை ரங்கசாமி கவுண்டரவர்கள் திருவடியருகே வைத்து சாஷ்டங்கமாக விழுந்து கும்பிடுவான். இவர் அச் சேவலைப் பெற்றுக் கொண்டு, அவனுக்கு நல்ல பாகை, உத்தரீயம், மோதிரம் ஏதேனும் சன்மானம் பண்ணி அனுப்பி விடுவார். பிறகு பழைய அரமனைச் சேவலைத் தள்ளி விட்டுப் புதிதாக வந்த சேவலை 'சமஸ்தான வித்வாளுக" வைப்பார்கள். அடுத்த சண்டையில் இது தோற்றுப் போய் மற்ருென்று வரும். எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதம் இருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்