பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 ஏற்படக்கூடிய விஷயமா? மகாராஜா சாலுக்கு இந்த முத்திருளுதான் சரியான நாய்குட்டி. இவனிடத்திலே சொன்னல்தான் நமது கவி அரங்கேறுமென்று கண்டு பிடித்து விட்டான். புத்தி. அந்தப் பாட்டை ஒருநாள் சபையிலே அரங்கேற்றும்படி உத்தரவானல் அப்போது இந்த அய்யங்கார்கள், புலவர்கள், இவர்களுடைய சாமார்த்தியங்களெல்லாம் வெளிபட்டுப் போ கு ம். அடியேன் ஒருவேைலதான் அந்தக்கவிக்கு பொருள்சொல்ல முடியும். மற்றவர்களாலே குட்டிக்கரணம் போட்டாக் கூட நடக்காது. அடியேனுக்குக்கூட அந்தப் பாட்டைக் கேட்டவுடனே இரண்டு நிமிஷம் திகைப்புண்டாய் விட்டது. பிறகுதான்-அடியேனுக்கு மகாராஜா கடாக: மும், சரஸ்வதி கடாrமும் கொஞ்சம் இருக்குதேகொஞ்சம் நிதானித்துப் பார்த்தேன். அர்த்தம் தெளி வாகத் தெரிந்தது." என்று முத்திருளு சொன்னன். ஜமீன்தார், அப்படியா! யமகமா பாடுகிருன். உனக்குக்கூட அர்த்தம் கண்டு பிடிக்கத் திகைத்ததென்ருல் வெகு நேர்த்தியான பாட்டாயிருக்குமே. பார்ப்போம், பார்ப்போம். நம்ம புலவர்களுடைய சாயம் எல்லாம் நாளை வெளுத்துப் போகும். நாளைக்கு சாயங்காலமே வைத்துக் கொள்ளுவோம். புலவர்களுக்கெல்லாம் சொல்லியனுப்பி விடு. ஒருவன்கூடத் தவறக்கூடாது, எல்லோரும் வந்து சேரவேணுமென்று." இந்த ஆக்கினையைக் கேட்டு முத்திருளு சந்தோஷ முடையவனுய் வணங்கிச் சென்ருன், மகாராஜாவும், தமது நித்திய அநுஷ்டானங்களுக்குப் புறப்பட்டுவிட்டார்! "நித்திய கர்மானுஷ்டானங்கள் என்று எழுத உத்தேசித் தேன். ஆனல் கவுண்டரவர்களுக்குக் கரிமம் ஒன்றுமே கிடையாது. அத்வைதிகள் சொல்லும் நிற்குண பிரம்மத் தின் ஜாதியை சேர்ந்த ஆசாமி.