பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 யமகம் பாடிய காலத்தில் சின்ன சங்கரனுக்கு வயது மிகவும் கொஞ்சம். இவனுடைய தகப்பனர் கப்பிரமணிய அய்யருக்கும் சமஸ்தான வித்வான் முத்திருளக் கவுண்ட னுக்கும் மிகுந்த் சிநேகமுண்டு. அவன் அடிக்கடி வந்து கப்பிரமணிய அய்யரிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதுண்டு. கடனென்று சொல்லித்தான் வாங்குவான். ஆனல் முத்திருளன். தயவிருக்கும்வரையில்தான் ஜமீந்தா ருடைய தயவும் இருக்குமென்பதை நன்முக அறிந்த சுப்பிரமணிய அய்யர், அவனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கும் வழக்கமில்லை. அவனும் ராஜாங்க விவகாரங் களிலே புத்தியை அதிகமாக உழைப்பவனதலால், மிக்க மறதிக்குணம் உடை வன். பணம் வாங்குவது அவனுக்கு கொஞ்சமேனும் ஞாபகமிருப்பதில்லை. சின்னச் சங்கரன் விஷயத்தில் முத்திருளனுக்கு விசேஷ அன்பு ஏற்படுவதற்கு வேருெரு காரணமும் உண்டு. முத்திருளன் தகப்பன், எண்பது வயதுள்ள சோலையழகுக் கவுண்டன் என்பவன் கண்ணிழந்து வீட்டிலே உட்கார்ந்துக் கொண்டிருந்தான்; இந்தச் சோலையழகு தமிழ் காவியங்களிலே சாrாத் நச்சினர்க் கினியருக்கு சமானமானவன் என்பது அந்தவூர்க் கவுண்டருடைய எண்ணம். சோலையழகுக் கவுண்ட னிடத்தில் சங்கரன் தினம் பள்ளிக்கூடம் விட்டவுடனே போய்ப் பழைய புலவர்களின் சரித்திரங்களும், பழைய கடினமான விடுகவிகளுக்குப் பொருளும், கதைகளும் கேட்டுக் கொண்டிருப்பான். ஊ ரி லு ள் ள பெரிய மனுஷ்யர்களிலே ஒருவராகிய சுப்பிரமணிய அய்யரின் பிள்ளை தன்னிடம் வந்து பாடம் கேட்டுக்கொள்வதைப் பற்றி திருதராஷ்டிரக் கவுண்டனுக்கு அளவற்ற பூரிப்பு ற்பட்டிருந்தது. அந்தக் குடும்ப முழுதிற்குமே சங்கரன் மேல் ஆசை ஆதிகம்,