பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 'விருதை சிவஞான யோகியார் என்பவர் பெரும்புலவர் புலவர் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். எப்போதும் புலவர் பலர் சூழ வீற்றிருந்தவர். "சுப்பையாவின் கவித்திறமையைச் சோதித்து அறிந்த சிவஞான யோகியார், புலவர் பலர் கூடிய சபையிலே சுப்பையாவுக்குப் பாரதி என்ற பட்டம் சூட்டினர்." இவ்வாறு கூறுகிருர் எட்டயபுரம் சோதிட வித்வான் குருகுகதாஸப்பிள்ளை. இளம் பாரதியார் கவிகள் பொழிவதில் எப்படி வல்ல வராக இருந்தாரோ அப்படியே மற்ருென்றிலும் வல்லவ ராக விளங்கினர். அதாவது எதிரிகளை மடக்கி முறியடித்து அவர்கள் முகத்தில் கரிபூகம் திறமை. பாரதியார் கல்வி பயின்ற அதே கல்லூரியில் மற் ருெருவரும் கல்வி பயின்ருர். அவர் பெயர் காந்திமதிநாதன் என்பது. பாரதியாரை விட இரண்டு மூன்று வகுப்புகள் மேலே படித்து வந்தார் அவர். காந்திமதிநாதன் நன்கு தமிழ் பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேைல ஒரளவு தமிழ்ப் புலமையும் இயற்கையாகவே பெற்றிருந்தார். இளம் பாரதி மீது அவருக்குப் பொருமை. பத்துப்பேர் புலவர் நடுவே பாரதியை மட்டம் தட்ட எண்ணினர் அவர். அதற்குரிய காலமும் நேரமும் கருதியிருந்தார். தக்கதோர் வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள், காந்திமதிநாதன் வீட்டிலே புலவர் பலர் கூடியிருந்தனர். பாரதி சுப்பையாவும் இருந்தார். பாரதி கப்பையாவை மட்டம் தட்டக் கருதியிருந்த காந்திமதி நாதன் இந்தத் தருணத்தை நன்கு பயன் படுத்த விரும்பினர்.