பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நடக்கும் என்று எண்ணிய ஐயர் ஏமார்ந்தார். நஷ்டமே வந்தது. கூட்டுச் சேர்ந்தவர்கள் விலகிக் கொண்டார்கள். நஷ்டம் முழுவதும் ஐயரி தலையில் வீழ்ந்தது. கடன்காரர் ஆனர் ஐயர். தொல்லைக்கு ஒர் எல்லை இல்லை, ஐயர் செல்வாக்குடன் இருந்தபோது சுற்றியிருந்த கூட்டம் பறந்தோடி விட்டது. வலிய வந்து பேசிய நண்பர் பலரும் எட்டி நின்ருர்கள். உறவினர் எவரும் வரவில்லை. பாவம் என்ன செய்வாரி ஐயர்: மனமுடைந்து விட்டார்; உடல் மெலிந்தார்; நோய் வாய்ப்பட்டார். காலன் வந்து அவர் உயிரைக் கவர்ந்து சென்ருன். பதினறு வயதை எட்டிப் பாராத பாரதி என்ன செய்வார்? ஆதரிப்பார் எவருமின்றித் தவித்தார். ஆறுதல் கூறுவதற்கு எவருமிலர். தந்தை போயினன்; பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதில் அஞ்சலென்பார் இலர் எந்த மார்க்கமும் தோன்றிலது! என் செய்கேன் என் பிறந்தேன் இத்துயர் காட்டினிலே என்று வருந்தி ஏங்கினர் பாரதி; தவித்தார்; துடித்தார். சின்னச்சாமி ஐயரின் சகோதரி குப்பம்மாள். இவரது கணவரது பெயர் கிருஷ்ணசிவன். இவர்கள் காசியிலே வாழ்ந்து வந்தார்கள்: தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் செல்கிறவர்களுக்கு வேண்டிய உதவி செய்து வந்தார்கள். பாரதியின் நிலையை அறிந்தாள் குப்பம்மாள். காசிக்கு வந்து விடுமாறு பாரதியை அழைத்தாள்; அத்தையின் அழைப்புக்கு இணங்கினர் பாரதி; காசிக்குச் சென்ருர், அதிதையின் ஆதரவில் வாழ்ந்தார்.