பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 காசி இந்து கல்லூரியிலே சேர்ந்தார் பாரதி; இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்ருர்; மெட்ரி குலேஷன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ருர். பிறகு அலாகாபாத் சர்வகலாசாலையின் பிரவேச பரீட்சையில் முதன்மை பெற்றுத் தேறினர். காசி வாசம் அவரது கருத்திலே பெரும் புரட்சியை உண்டு பண்ணியது. வைதிகம் என்பது குடுமியில் இல்லை என்று கருதினர். பக்தி என்பது விபூதியில் இல்லை என்று எண்ணிஞர். எனவே, ஒரு நாள் தமது குடுமியை எடுத்து விட்டு முடியை கிராப் செய்து கொண்டார் பாரதி; மீசையும் வைத்துக் கொண்டார். வைதிக பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன், இந்த மாதிரி மீசையும், கிராப்புமாகக் காட்சியளித்தது கண்டார் சிவன்; சீறினர். 'என்னடா! சுப்பையா எதற்காக இந்தக் கோலம்? எதற்காகக் குடுமியை எடுத்தாய்? எதற்காக இந்த மாதிரி மீசை வைத்துக் கொண்டாய்? இன்று முதல் நீ எங்கள் பந்தியில் சேர்ந்து சாப்பிடக் கூடாது. என்றைக்கு நீ குடுமி வைத்துக் கொண்டு, மீசையை எடுத்து விட்டு வருகிருயோ அன்றுதான் சேர்ந்து சாப்பிடலாம்' என்று கத்தினர். பாரதி என்ன செய்தார்? பதில் பேசினரா? இல்லை. பேசாமல் மாடிக்குப் போய் விட்டார். சிறிது நேரம் சென்றது. அத்தை குப்பம்மாள் மாடிக்குச் சென்ருt. பாரதிக்கு உணவு அளித்து வந்தார். சிவனின் சைவம் பாரதியின் புரட்சி கண்டு சீறியது. புரட்சிக்கு இடமளிக்க மறுத்தது. சைவம் பறிபோய் விட்டதாக எண்ணிப் பதறியது.