பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காங்கிரசுக்கு டெலிகேட்டுகளாகப் பின்வரும் பெயர் களைத் தெரிந்தெடுத்தது. 1. சி. சுப்பிரமணிய பாரதி 2. எம், நரசிம்மம் 3. வி. நரசிம்மம் 4. ஆர். சபாபதி. கல்கத்தா காங்கிரசுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பொருட்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பொருட்காட்சி பற்றி "இந்தியா’ பத்திரிகையிலே ஒரு தலையங்கம் எழுதினர் பாரதியார். 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ந் தேதியிட்ட இந்தியாவிலே அது வெளியிடப்பட்டுள்ளது. அது வருமாறு: "பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் இந்தியரை அரசாட்சி புரிவதில் மிகவும் சமர்த்தான முறைகளை அனுசரிக் கிருர்கள் என்பதும் அம்முறைகள் எப்பொழுதும் அனுகூல மடைந்து வருகின்றன என்பதும் வெளிப்படையாய் தெரி கின்றது. ஜனங்கள் மிஞ்சுகிற சமயம் கெஞ்சுவதும், கெஞ்சுகிற சமயம் மிஞ்சுவதும் அவர்களுடைய பரிசுத்த முறைகளாம். அவ்வாறே இப்போது வங்காளத்து ஜனங் களும் ஜனத் தலைவர்களும் இருக்கும் நிலையை அறிந்து அதற்கேற்ற சில யோசனைகள் செய்தார்கள். பொருட் காட்சி நடத்தும் ஜனத்தலைவர்களுக்கும்கூட ஹால்களும் இடங்களும் கொடுத்துப் பரப்பினர்கள். பொருட்காட்சி விஷயத்தில் தங்களுக்கு மிகுந்த அநுதாபமும் உத்ஸாகமும் இருப்பது போல் நடித்தார்கள். பற்பல விளம்பரங்கள் விடுத்தார்கள். இதைக் கண்ட பாபு சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய ஜனத்தலைவர்கள் கவர்ன்மெண்டாருடைய உட்கருத்தை அறியாமல் அவர்களைப் பூரண விசுவாச முடையவர்கள் என்று எண்ணி மனங்குளிர்ந்து லார்டு மிண்டோவையே பொருட்காட்சியைத் திறக்கும்படி வேண்டினர்கள். இது