பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கல்கத்தா மாளுக்கர்களுக்கும் புதுக் கட்சித் தலைவர்க ளாகிய பூரீ விபின சந்திர பாலர் முதலியவர்களுக்கும் சரி யாகத் தோன்ருமையால் சரியில்லை யெனத் தடுத்தார்கள். தடுக்கவே, இத்தனை காலமும் சுதேசியத்துக்கு உழைத்து வந்த மாளுக்கர்களை வாலண்டியர்களாகச் சேர்ப் பதின்றித் தள்ளிவிட்டார்கள். என்ன மடமை! கேவலம் விதேசியாகிய லார்டு மிண்டோவையே சந்தோஷிப்பிக்க வேண்டும் என்ற பேராசையால், இந்தியாவுக்குத் துணையாக நின்று சுதேசியத்துக்கு உழைக்கும் மாளுக்கர்களைத் தள்ள லாமா? அந்நியருடைய வாசனையே ஆகாது என்று விரதம் பூண்டு வளரும் சுதேசியத்தில் லார்டு மிண்டோவை ஏன் கலக்க வேண்டும்? இதல்ை சுதேசியத்துக்கு ஏதேனும் நன்மையுண்டா? வாய்ப்பேச்சு மட்டும் லார்ட் மிண்டோ இனிமையாய் பேசுவாரேயன்றி சுதேசியத்தில் அவருக்கு உண்மையான பற்று இருக்கும் என்று நம்பலாமா? பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்ததுபோல், சுதேசியப் பொருட்காட்சி, ஒருவரையும் அறியாமல் மிண்டோ காட்சி யாய் போய்விட்டது." பாரதியார் கல்கத்தா காங்கிரசுக்குப் போனர் என்று சொல்லவும் வேண்டுமா? கல்கத்தா காங்கிரசுக்குப் போளுர்; புதிய கட்சித் தலைவர் பலருடன் நெருங்கிப் பழகினர்; கலந்து பேசினர். கல்கத்தாவுக்கு அருகே "டம்டம்’ என்ற பகுதியிலே நிவேதிதா தேவி இருப்பதாக அறிந்தார். அவரைச் சந்தித்தார். நிவேதிதை யார்? சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டிலே வீர முழக்கம் செய்து விட்டு இங்கிலாந்துக்குச் சென்ருர். அங்கே தொடர்ந்து பிரசங்கம் செய்து வந்தார். ஏராளமான மக்கள் வந்து சொற்பொழிவு கேட்டனர். அப்படிக் கேம் 4