பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ஸ்தானத்துக்கு தகுதியுடையவராக மாட்டார். இவரைப் புதிய கட்சியார் அக்கிராசனம் பெறக் கூடாதென்று எதிர்க்க உரிமையுடையவராகின்ருர் அள். ஆனல் இதுவரை காங்கிரஸ் சபாநாயகர் எவ்விதமான எதிர்ப்புமில்லாது பொதுவாக எல்லாக் கட்சியாலும் அங்கீகாரம் செய்யப் படுதல் மரபு. ஆகவே இந்த வருஷம் புதிதாக எதிர்ப்புத் தொடங்குவோமேயானல் அது நிதானஸ்தர்களின் மனதைப் புண்படுத் தக் கூடும். இதனை உத்தேசித்து அவர் களிடம், "நாம் சபைத் தலைவர் நியமனத்தை எதிர்ப்பது கிடையாது. அதற்குப் பிரதியாக நீங்கள் சென்ற வருஷத் தீர்மானங்களைக் குலைப்பதில்லை என்று வாக்குறுதி கொடுங்கள் என்று கேட்கலாம். அப்படிக் கேட்டால் அவர்கள் தம்முடைய தீய செய்கையை நிறுத்தி விடுவார் கள் என்பதில் ஆக்ஷேபமில்லை" என்று திலகர் நிச்சயித்தார். அதற்கிணங்கவே புதிய கட்சியார் காங்கிரஸ் தீர்மானங்கள் முன் வருஷத்து நிலைமையிலே பாதுகாக்கப் படுமென்று வாக்குறுதி கொடுத்தால் நாங்க ள் சபைத்தலைவர் நியமனத்தை எதிர்ப்பதில்லை. அப்படி வாக்குறுதி கொடுக்காத விஷயத்தில் எதிர்த்தே தீருவோம்” என்றனர். அவ்விதமான வாக்குறுதி கொடுக்க கோகளே முதலியவர்கள் சம்மதிக்க வில்லை, சமாதானத்துக்கு வருபவர்கள் போலப் பாவனை செய்துவிட்டு கடைசியில் நிதானஸ்தர்கள் ஏமாற்றி விட்டார்கள். இதிலே புதிய கட்சியாருக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. இடையே சென்னைப் பிரதிநிதிகளின் கூடாரத்தில் ரீ கோகளே ஒரு மீட்டிங் நடத்தினர். அவர் புதிய கட்சியாரை ஸ்ர்க்கார் பூச்சாண்டியின் பெயரைச் சொல்லி பயமுறுத்தியது மல்லாமல் வேறு பல விதங்களாலும் அவர்கள் மனதைப் புண்படுத்தினர். இது நிற்க.