பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 26ந்தேதி பகலில் காங்கிரஸ் சபை கூடிற்று. சுமாரி 1500 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். பிற ஜனங்கள் பல்லாயிரம் பேர் வந்திருந்தார்கள். சபை தொடங்கு முன்பாக சில பார்ஸி மாதர்களும், குஜராத்தி ஸ்திரீகளும், 'வந்தே மாதரம் பrட்டையும் வேறு பல சுதேசியப் பாடல்களையும் வாத்தியத்தோடு இனிய கந்தருவக் குரலிலே பாடினர்கள். அவர்கள் பாடும்போது சபையோ ரெல்லாம் எழுந்து நின்று பக்தி பாராட்டினர்கள். அப்பால் ரீமான் மால்வி (உபசரணைச் சங்கத்தின் தலைவர்) வழக்கப்படியே நல்வரவு கூறி ராஸ் விஹாரி கோஷ் சபைத் தலைவராக வேண்டுமென்று பிரேரணை செய்தார். அதை ஆமோதிக்கும் பொருட்டாக பூரீமான் சுரேந்திரநாத் பானர்ஜி எழுந்தார். உடனே பெருங் கூச்சலும் குழப்பமும் உண்டாய் விட்டன. (பாரிஸாலிலும், கல்கத்தாவிலும் சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய நிதானக் கட்சித் தலைவர்களைப் போலீஸ் காரர்கள் அவமதிப்புடன் நடத்திய காலத்தில் தேச முழுதும் ஜனங்கள் மனத்திலே ஆத்திரமுண்டாய் அந் நிதானத்தலைவர்கள் மீது ஜனங்களுக்கிருந்த பற்றும் பக்தியும் பலமடங்கு அதிகப் பட்டன. மைமன்ஸிங் முதலிய இடங்களிலே போலீஸார் ஜனங்களைப் படுத்திய இமிசை நமது நெஞ்சினின்றும் நீங்க இன்னும் நெடுங் காலம் செல்லும். இவ்வாறிருக்க மித்னபூரில் நடந்த கான்பரன்சிலே நிதானக் கட்சித் தலைவர் சுதேசியஸ்தர்களை (புதிய கட்சியாரை) அடக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே போலீஸார் உ த வி ைய நாடி சபைக்குள்ளேயே போலீஸாரை அழைத்து வைத்திருந்தபோது பொதுஜனங் களுக்கு அளவற்ற துக்கமும் கோபமும் உண்டாயின,