பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கோடையிலே திடீரென்று தோன்றுகிறது கொண்டல்! கறுத்துத் திரண்டு எழுகிறது; உறுமுகிறது; இடித்து முழங்குகிறது; மின் வெட்டுகிறது. மழை மழை பொழி கிறது! பொழிகிறது! அடர்த்துப் பொழிகிறது. அப்பால்! விலகி விடுகிறது! மறைகிறது! மாரி பொழிந்தது! மாய மாய் மறைந்தது! வானம் தெளிந்தது. மேகம் எங்கே? காணுேம்: மறைந்துவிட்டது. இடி, முழக்கம் எங்கே? கேட்கவில்லை. உறுமுதல் எங்கே? எங்கும் கேட்கவில்லை. மின்வெட்டு எங்கே? பளிச்சிடல் இல்லை. ஒன்றும் காணுேம். மழை நீர் மட்டும் ஒடிக்கொண்டிருக் கிறது. கோடை மேகம் நீடிப்பது இல்லை. கோடை மேகம் போலத் தோன்றினர் பாரதியார்: இடித்து முழங்கினர்; கவி மழை பொழிந்தார்; பின் மறைந்தார். நீண்ட நாள் நிலவுலகில் அவர் உலவினர் அல்லர். ஆயினும் முப்பத்தி ஒன்பது வயதுக்குள் அவர் பொழிந்துள்ள கவி மழையை நோக்கினல் என்ன தோன்றுகிறது? "மாபெரும் சாதனை' என்று கூறத் தோன்றுகிறது. அவர் வாழ்வில் என்ன கண்டார்? வறுமை! வறுமை! வறுமையே கண்டார். வறுமை வருத்தியது. ஒரு கவியைத் தோற்றுவிப்பது போராட்டமே! அவனை உருவாக்குவதும் போராட்டமே. வளர்ப்பதும் போராட்டமே. இந்திய விடுதலைப்போரின் தோன்றலே பாரதி; அது உருவாக்கிய கவியே பாரதி; அதன் துாதுவன் பாரதி; தலை நாள் முழக்கம் பாரதி; தலைநாள் எக்காளமே பாரதி,