பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தார்கள்.

ஆங்கிலேய அதிகாரிகள், சுதேசி மன்னர்கள், பல பெரிய ஜமீன்தார்கள்,

ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்த தாரகர்கள் ஆகியோருடைய ஆடம்பரங்களுக்கும் அளவே இல்லை.

இந்திய நாடு முழுவதும், பிரிட்டிஷ் மூலதனத்தின் நிலைகளனாகவும், அவர்களுடைய தொழில்களுக்கான மூலப் பொருள் பண்ணையாகவும் அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையாகவும் படிப்படியாக ஆக்கப்பட்டது.

இந்திய நாட்டில் அடித்த கொள்ளையில் ஆங்கிலேயர் பல உலகப் பெரும் தனவந்தர்கள்.ஆனார்கள்.

பாரத நாட்டின் விவசாயம் சீர்ழிந்தது. பாரம்பரியமான நீர்ப்பாசன நிலைகள், நீர்ப்பாசன முறைகள் நிலை குலைந்தன. நமது பாரம்பரியமான கோயில்கள், கலாச்சார செல்வங்கள் சிதைந்து போயின. பல்லாயிரக் கணக்கான பாரம்பரியமிக்க இந்தியத் தொழில்கள் நசிந்து போயின். நமது நாட்டின் பழைய போக்குவரத்து முறை நசிந்து போயிற்று. வியாபாரம் சீரழிந்தது. நமது பாரம்பரியமான சிறப்புமிக்க கல்வி முறை அழிந்தது. அந்நிய ஆட்சியாளர்களுக்கு தேவையான ஆங்கிலக் கல்வி முறையைப் புகுத்தினார்கள்.

நமது எளிமையான பஞ்சாயத் நீதிமுறைகள் அழிந்தன. போலீஸ் ஆட்சி ஏற்பட்டது. இந்திய மக்கள் போதுமான அன்ன ஆகாரமின்றி இறந்து போனார்கள். பல லட்சக்சகணக்கான ஏழை எளிய மக்கள் பஞ்சத்தால் செத்து மடிந்தார்கள்.

இப்படிப்பட்ட அவல நிலை பாரத நாட்டில் முன் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை. எனவே நமது நாட்டின் சுதந்திரம் பாதிக்கப்பட்டதுமல்ல, நாடு அன்னியருக்கு அடிமைப்பட்டது மட்டுமல்ல. பாரத நாட்டின் சமுதாய வாழ்வே சீரழிந்து நிலை குலைந்து போயிருந்தது.

இதற்கிடையில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் தொழில் வர்த்தக நலன்களை உயர்த்திக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், புதிய வகையிலான போக்குவரத்து அமைப்புகள், தபால் தந்தி அமைப்புகள், சென்னை பம்பாய், கல்கத்தாஆகிய மூன்று துறைமுகங்கள், அதை ஒட்டிய போக்குவரத்து அமைப்புகள், ரயில் பாதை, சிறு சிறு பழுதுபார்க்கும் நவீன தொழில் பட்டரைகள் முதலியனவற்றை உருவாக்கினார்கள்.

மனித சிந்தனை அளவில் புதிய வகை ஆங்கிலக் கல்வியைப் புகுத்திப் பரப்பினார்கள். நாட்டை நிர்வாக அளவில் அடிமைப்படுத்தியது மட்டுமல்ல, சிந்தனை அளவிலும் அமைப்படுத்த முயன்றார்கள். பாரத

| 10