பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியை 1958 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்கள். அது முதல் இந்திய நிர்வாகம் பிரிட்டிஷ் பார்லிமெண்டின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய நாட்டில் இருந்த பல சுதேசி சமஸ்தானங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அவைகள் எல்லாம் பிரிட்டிஷ் அரசின் கீழ் சிற்றரசுகள் ஆயின. பிரிட்டிஷ் ராணி, இந்தியாவின் சக்கரவர்த்தினி ஆனார்.

இந்திய நாட்டில் பல நிர்வாக சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. நிர்வாக சீர்திருத்தங்கள் என்றால் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஒரு காலனி ஆட்சி நிர்வாகம் உருவாக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் தலைநகர், கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது. புது டில்லி கட்டப்பட்டது. இந்தியாவிற்கு பிரிட்டிஷ் அதிபராக வைஸ்ராம் அல்லது கவர்னர் ஜெனரலாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்த மாகாணங்களுக்குத் தலைமை நிர்வாகியாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிரிட்டிஷ் இந்திய அரசின் முதல் வேலை சட்டம் அமைதியைப் பாதுகாத்தல், இந்திய மக்களை சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்துவது அந்த அரசினுடைய முதல் வேலை அதற்காக ஒரு போலீஸ் அரசு- ஆட்சி நிறுவப்பட்டது என்று கூறலாம்.

இந்திய தண்டனைச்சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், நாடு முழுவதும் போலீஸ் சட்டம், போலீஸ் அமைப்பு, போலீஸ் நிர்வாகம், நீதிமன்றங்கள் - மாகாண கவர்னரின் கீழ் மாவட்ட கலெக்டர்கள், கலெக்டர்களின் கீழ் தாசில்தார், நெவினிய இன்ஸ்பெக்டர், கிராம சிப்பந்திகள், ஆகியவை எல்லாம் வரி வசூல் அதிகாரிகள்தான். நிலவரி வசூல் செய்வதுதான் அரசின் முக்கிய வேலை. இந்த வரி வசூல் பணத்தை வைத்து நிர்வாகத்தை முக்கியமாக போலீஸ் நிர்வாகத்தை நடத்துவது. போலீஸின் முதல் வேலை இந்திய மக்களை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடக்கி வைப்பது. சிறு குற்றங்கள் நடந்தால் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி, தண்டனை கொடுத்து சிறையில் அடைப்பது.

இவ்வாறாக, வரி வசூல், நிர்வாகம், போலீஸ், நீதிமன்றம், தண்டனை, சிறைச்சாலை ஆகியவைதான் பிரிட்டிஷ் அரசின் முக்கிய அம்சங்கள். எனவே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்பது பிரிட்டிஷ் நலன்களைப் பாதுகாகக்கூடிய ஒரு சட்டப்பூர்வமான வன்முறைக் கருவியாக பிரிட்டிஷ் ஆட்சி செயல்ப்பட்டது. அத்துடன் அரசின் அங்கமாக சில ஆட்சித்துறைகளும் உருவாக்கப்பட்டு அவை நிர்வகிக்கப்பட்டன.

கவர்னகள், கலெக்டர்கள், நீதிபதிகள், மாநில அளவிலான அதிகாரிகள் அனைவரும் நல்ல சம்பளத்தில் எல்லா வசதிகளுடன் ஆங்கிலேயர்களே

109