பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய கடல் கொள்ளைக்காரர்கள், காலனிக் கொள்ளையர்கள், ஆக்கிரமிப்பாளர் பதினோடு, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடத்திய காலனிக் கொள்ளைகளும் உலக வரலாற்றில் கரை படிந்த அத்தியாயங்கள். அதில் பாரத நாட்டில் பிரிட்டின் கிழக்கிந்திய கம்பெனியின் கொள்ளைக்காரர் நடத்திய கொடும்ைகள் உலக வரலாற்றில் கரை படிந்த நிகழ்ச்சிகளாகும்.

பாரத நாட்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் மூலம், வாணிபம் மூலம் தொழில்கள் குறிப்பாக நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில், போக்குவரத்துத் தொழில், இந்திய மக்களின் வாணிபம், தொழில்கள் அழிக்கப்பட்டது. பாரம்பரியமான விவசாய உற்பத்தி முறை, விதைகள், பயிர் வகை சாகுபடி முறை அழிக்கப்பட்டது. நீர்ப்பாசன முறை குறிப்பாகக் கால்வாய், கண்மாய் ஏரி, குளம், பாசன முறை சீரழிந்தது போதுமான பராமரிப்பு இன்றி சிதைந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின் மூலம், கல்வி நிலையங்கள், திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள், பல்கலைக்கழகங்கள், சிதைந்தன. படிப்படியாக மறைந்தன.

கோயில்கள் சிதைந்தன. பூசைகள் மறைந்தன. குறைந்தன. பராமரிப்புகள் குறைந்து பல கோயில்கள் அழிந்தன, சிதைந்தன.

பாரத நாட்டின் பாரம்பரியமான கலைகள் சிற்பம், இசை, நாட்டியம், முதலியவைகள் எல்லாம்களை இழந்தன. கவனிப்பாரற்றுக் குற்றுயிராயின.

கிராமப் பஞ்சாயத்து, நிர்வாகங்கள் சிதைந்தன. சரீரப் பயிற்சிகள் மக்களிடத்தில் குறைவுபட்டு, மக்கள் பல மிழந்து நலிவுற்றனர்.

இவ்வாறு நூற்றாண்டுக்காலம் பாரத நாடு கொள்ளைகளுக்கும் போர்களுக்கும், நாசங்களுக்கு ஆளாகி களையிழந்து நின்றது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக இந்த நூறு ஆண்டுகளில் மக்களும் பல கலவரங்களும் ஆட்சேபணைகளும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளார்கள். அக்கலவரங்களில் ஒட்டு மொத்தமான தேசிய அளவிலான கிளர்ச்சி வடிவமாக 1857 ஆம் ஆண்டில் நாடு தழுவிய மிகப் பெரிய கலவரமாக, பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சிக்கெதிராக நாடு முழுவதிலும் வெடித்தது. இதில் பிரிட்டிஷ் கம்பெனியின் ஆட்சியே ஆட்டம் கண்டது.

இந்திய நாட்டில் ஏற்பட்டநிகழ்ச்சிகளைகூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் பார்லிமெண்டும், அந்த நாட்டின் ஆட்சியாளர்களும், தலையிட்டு கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நேரடி

H

108