பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் இதை சுலபமாக ஏற்கவில்லை. எல்லா வகையிலும் பிரிட்டிஷ் அந்நிய ஆட்சிக்கு எதிராக மக்களுடைய உணர்வு நிலை வளர்ந்தது.

பாரத தேசிம் ஒரு சிறிய நாடல்ல. நீண்ட வரலாறும், நாகரிகமும், கலாச்சாரமும், பண்பாட்டு வளர்ச்சியும், பாரம்பரியமும் கொண்ட நாடு. எனவே பாரத நாட்டை அமைப்படுத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. =

எனவே நாட்டு மக்களுடைய சுதந்திர கோரிக்கை என்பது வெறும் தன்னாட்சி சுயாட்சி கோரிக்கையாக மட்டுமில்லை. அரசியல், பொருளாதாரம், சமுதாய வாழ்க்கை, கல்வி, வாழ்க்கை நெறி முறைகள், கலாச்சாரம் அனைத்திலும் சுதந்திரம் மலர்ச்சி பெற வேண்டும் என்பது நாட்டு மக்களின் தேவையாக இருந்தது.

நாட்டு அரசியல் நிர்வாகத்தில் மட்டுமல்ல, நாட்டின் சமுதாய வாழ்வின் சகல துறைகளிலும் சுதந்திரமான வளர்ச்சி என்பது பாரத மக்களின் அபிலாட்சையாக இருந்தது.

வேதங்கள், உபநிடழங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பல்வேறு துறைகளிலான அறிவு வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி, இன்றும் தமிழகத்தில், சங்க இலக்கியங்கள், ஐம்பெறும் காப்பியங்கள் அந்நூல்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்ந்த அருந்தமிழ் பக்தி இலக்கியங்கள் முதலியன வெல்லாம் மக்களுடைய உள்ளத்தில் ஊறிப் போயிருக்கின்றன. அந்த உறுதிமிக்சக உள்ளத்தில் அந்நிய ஆட்சியின் பேடிக்கல்வி எங்கே புகும்?

எனவே நமது தொழில், நமது கல்வி, நமது பஞ்சாயத் நிர்வாகம், சரீரப் பயிற்சி இவற்றைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது தேசிய இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக வளர்ச்சி பெற்றது.

எனவே நமது சுதந்திரம் என்பதுடன் சுதேசியமும் சேர்ந்து கருத்து உருவாக்கி வளர்ச்சி பெற்றது.

நமது நாடு 1947 ஆகஸ்ட் 14, 15ந் தேதிகளில் சுதந்திரம் பெற்று விட்டது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாக சுதந்திரம் பெற்றது. இவைகளில் இந்திய யூனியன் அதற்குரிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டு பாராளுமன்ற ஜனநாயக நாடாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு உலகில் ஒரு முக்கிய நாடாக நிலை பெற்றிருக்கிறது.

இந்திய நாட்டில் அதன் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதபடி, ஜாதி மத இன, மொழி, பால் வேறுபாடின்றி மதலில் 21 வயதிற்கும், அதன்பின்னர் வயது அளுவு திருத்தப்பட்டு 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும்

| ||