பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குரிமை அளிக்கப்பட்டு மத்திய பாராளுமன்றத்திற்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்னும் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று மத்திய பாராளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. நகரமன்றங்கள் மாநகர மன்ங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கிராமநகர் பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துக்கள், மாவட்ட பஞ்சாயத்துகளும் உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. அவைகளின் செயல்பாடுகளில் நிதி வரவுசெலவு நிர்வாகங்களில் இன்னும் பெரும் அளவில் அபிவிருத்தி காண வேண்டியதிருக்கிறது. அதில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்திய நாட்டில், மத்திய பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், மாநகர மன்றங்கள், நகர மன்றங்கள், மாவட்ட ஒன்றிய, நகர, கிராமப் பஞ்சாயத்துக்கள் ஆகிய அமைப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயல்படும் ஜன நாயக முறை நிலை பெற்று விட்டது எனக் கூறலாம். ஆயினும் பாரத நாட்டிவ் சீரிய மரபுகளுக்கு ஏற்றவாறு இன்னும் இந்தத் துறையில் பெரும் அபிவிருத்திகளையும் மேம்பாடுகளையும், முன்னேற்றங்களையும் காண வேண்டியதிருக்கிறது.

சட்டப்பூர்வமான இந்த அரசியல் அமைப்புகளையும் நிர்வாக அமைப்புகளையும் வழி நடத்துவதற்கு பல நாடுகளிலும் அரசியல் கட்சிகள் உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பாரத நாட்டிலும் பல அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிர்வாகத்தில் பங்கு கொள்ளவும், வேறு பல அரசியல் மற்றும் சமுதாய முன்னேற்ற நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகள் உருவாயின.

இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் சீர்திருத்த நோக்கத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு உருவாயிற்று. பின்னர் இந்த அமைப்பு, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்குத் தலைமை காட்டும் பெரிய மக்களமைப்பாக வளர்ச்சியடைந்தது.

அத்துடன் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய நோக்குடன் வேறு சில அரசியல் கட்சிகளும் தோன்றின.

இந்திய நாடு சுதந்திரம் பெற்றபின்னர், 1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி 1952 ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்கும், மத்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. முறையாகப் பொதுத் தேர்தலும், பல்வேறு சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடைபெறுவதையொட்டி மக்களுடைய அரசியல் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.

112