பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்து ஜாதியராகவே கருதத்தக்கவர் ஆவர். எங்ஙனமெனில் ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன் சீனத்தில் பிறந்தவன் சீனன் ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து. இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் அதே மாதிரி நாம் ஏன் செய்யக்கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து, மூன்றும் ஒரே சொல்லின் திரிபகள் இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி. கிறிஸ்தவர்

தேசியக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப்பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்து கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசியக் கல்வியில் ரிக்வேதமும், குரானும், பைபிளும் சமானம் தேசியக் கல்வி முயற்சியில் ஜாதி மத வர்ண பேதங்களைக் கவனிக்கக்கூடாது என்று மகாகவி பாரதி வலியுறுத்திக் கூறுகிறார்.

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்குத் தேசியக் கல்வியே ஆதாரம் என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

ஹிந்துக்கள் யார்?

இந்தியா நாடு- பாரத தேசம் என்பது பாரம் பரியமும் தனி பண்பாடும் மிக்க ஒரு தேசம் அதன் வரலாறும் பண்பாடும் பாரம்பரியமும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் அதற்குமு. மேலானது நமது பெருமை மிக்க வேதங்கள் அதன் பழைமையைக் கணித்துக் கூற இயலாது. அறிவிற் சிறந்தது வேத நூல்கள் தத்துவங்கள், அரசியல் பொருளியில் இலக்கியங்கள், தத்துவ ஞான நூல்கள், இதிகாசங்கம், புராணங்கள், கதை நூல்கள், வரலாற்று நூல்கள், காப்பியங்கள், அறிவியல் நூல்கள், கணிதம் மற்றும் இதர அறிவியல் சாஸ்திரங்கள் முதலியவையெல்லாம் பெருமையும் பாரம்பரியமும் மிக்கவை. மிகச்செழுமையானவை. மனித வாழ்க்கையோடு இணைந்தவை. உலகில் முதன்முதலில் இதிகாசங்கள்உருவானது இந்திய மொழிகளிலாகும். நீண்ட வரலாற்றில் அவைகளுக்கு எத்தனையோ சோதனைகள் ஏற்பட்டன. அவைகளையெல்லாம் தாண்டி நமது சாஸ்திரங்கள் ஒளி வீசித்திகழ்கின்றன.

ஒரு தடவை தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற ஸ்தபதி கணபதி ஸ்தபதி அவர்களிடம் பேசியபோது பாரத நாட்டு சிற்பக்கலை என்பது வெறும் கலை மட்டுமல்ல, அது இன்றைய தொழில் நுட்பத்தரத்தில் அறிவியல் தொழில் நுட்பமாகும். நமது நாட்டின் இந்த கட்டிக் கலை பற்றிய அறிவியல் தொழில் துட்ப நூல்கள் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் பத்தாயிரம் ஆண்டுகளுக்க முன்பே இருந்து வந்திருக்கிறது அன்று குறிப்பிடுகிறார்.

இது ராமாயணப் பெருங்கதையில் வரும் அயோத்தி நகரம், கிட் கிந்தை நகரம் இலங்கை நகரம், இலங்கைக்குச் செல்வதற்கு நிர்மாணிக்கப்பட்ட

131