பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலம், பழைய இலங்கையை அனுமன் நெருப்பை வைத்து எரித்த பின்னர், மண்டோதரியின் தந்தையும் புகழ் பெற்ற சிற்பியுமான மயன் மூலம்

புதுப்பிக்கப்பட்ட இலங்கை.

மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரமும் இதர நகரங்களும் பாண்டவர்கள் கட்டிய பேரழகுமிக்க இந்திர பிரஸ்தம் ஆகியவையெல்லாம் நமது நாட்டின் பழம் பெருமை மிக்க சிற்பக் கலையில் நகர அமைப்புக்கலையின் கட்டிடக்கலையின் சின்னங்களால்லவா?

நமது பாரம்பரியம் சிறப்பும் பெருமையும் மிக்க நாகரிகரத்தை சற்று மறந்து விட்டோம், துங்கிவிட்டோம். குடும்ப கருணனும் நமது படைப்பல்லவா? மெத்தனமாக இருந்து விட்டோம்.

நமது பண்டைய பெருமை மிக்க இலக்கியங்கள் அறிவியல் இலக்கியங்கள், சிற்பம், வைத்தியம், மருந்தியல், கடல் இயல் கப்பல் கட்டுதல், பொருளியல் முதலிய எண்ணற்ற பல இலக்கியங்களையும் வெளிக் கொணர வேண்டும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டின் மீது படையெடுத்த பல பாரசீகர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் இஸ்லாமியப் படைகள், நமது நாட்டின் கலைச் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள். அறிவுச் செல்வங்களை அழித்தார்கள். காட்டு மிராண்டித்னமான முறையில் நமது சிறப்புமிக்க கலாச்சாரத்தை அழித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கிலேயப் படையெடுப்பாளர்கள் நடத்திய கொள்ளை கொடுமைகள் நாசங்கள் சொல்லில் அடங்காது. நமது பழைய அறிவுச்செல்வங்களெல்லாம் சிதைக்கப்பட்டன.

இவைகளையெல்லாம் நமது தேசியக் கல்வித்திட்டத்தில் ஆய்வு செய்தும், புதிய வரலாற்றுச்செய்திகளைக் கண்டு பிடித்தும் வெளிக் கொணர வேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மகாகவி பாரதி கீழ்க்கண்ட செய்தியை எடுத்துக் கூறுகிறார்.

ஹிந்துக்களின் கூட்டம்

இந்தியா முழுவதிலுமுள்ள ஹிந்துக்களின் அனுகூலத்திற்கு பாடுபட்டு வரும் “அகண்ட பாரத ஹிந்து சபை'யின் காரிய தரிசியான ஸ்ரீ ரத்னசாமு. என்பவர் தேராதுன் பட்டணத்திலிருந்து ‘'ஹிந்து'’ பத்திரிகைக்கு எழுதியிருக்கும் விகிதமொன்றில் பின்வருமாறு சொல்லுகிறார்.

‘இந்த மாதம் முதல் தேதி, சென்னை தலைமைப் பாதிரி எல்லூரில்

ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம்

நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து

132