பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பிய நாடுகளிலும், உலகின் வேறு பல நாடுகளிலும் தொழிலாளர் சார்பான அரசியல் கட்சிகளும் (பிரிட்டன் உள்பட) சமூக ஜனநாயகக் கட்சிகளும் அரசியல் அதிகாரத்திற்கு வந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் கூட, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சில மாநிலங்களில், தொழிலாளர் கட்சிகளும் தொழிலாளர் தொடர்பான கட்சிகளும் தலைவர்களும் அவ்வப்போது மக்கள் செல்வாக்கு பெற்று ஆட்சி பொறுப்புக்கு வந்து போகிறார்கள்.

இவ்வாறு தொழிலாளர் என்பது கூலிக்கு வ்ேலை செய்யும் உழைப்பாளர் என்றும் நிலைமாறி, அவர்களுக்கென பல அமைப்புகள் அவர்களுக்கென தனி சித்தாந்தம், அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, பொருளாதார கலாச்சார சிந்தைனை, சோஷலிஸம் என்னும் எதிர்காலத் தத்துவம், பல வகையான தொழிலாளர் கட்சிகள் திட்டங்கள், பத்திரிகைள், அவ்வப்போது ஆட்சி அதிகாரங்கள் இவ்வாறு தற்காலத்தில் தொழிலாளர் என்பது ஒரு வல்லமை மிக்க சமுதாய சக்தியாக வளர்ந்திருக்கிறது.

மார்க்ஸிலம் என்றால் என்ன?

உலகின் முதன் முதலாக தொழிலாளர்களின் தத்துவம் உழைக்கும் மக்களின் சித்தாந்தம் என்னும் பெயரில் வெளிப்பட்டது. அதை ஜெர்மனிய அறிஞர்களான காரல் மார்க்சும், பிரடரிக் ஏங்கல்சும் உருவாக்கி வெளியிட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸிசம் ஒரு சக்தி மிக்க சித்தாந்தமாக வெளிப்பட்டது. மார்சிசம் என்றாலே அது வன்முறைகளை நடைமுறையாகக் கொண்ட ஒரு தத்துவம் என்று பலரும் அச்சப்பட்டார்கள்.

மார்சிசத்தைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு பல அரசியல் அமைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றின.

காரல் மார்க்ஸ் தானே முன்னின்று தோற்றுவித்த தொழிலாளர்கள். அரசியல் அமைப்பு, முதலில் கம்யூனிஸ்ட் லீக், அடுத்து அனைத்து நாட்டு உழைக்கும் மக்களின் அமைப்பு (...) என்பதாகும். இந்த அமைப்பு முதலாவது அகிலம் என்று தொழிலாளர் இயக்க வரலாற்றில் அழைககப்படுகிறது. இந்த அமைப்புகள் மார்க்ஸ் காலத்திலேயே செயல் இழந்து குறைந்து விட்டன. i.

காரல் மார்க்ஸ் காலத்திற்குப் பின்னர், ஐரோப்பாவில் வேறு பல தொழிலாளர் தலைவர்களும் சேர்ந்து சற்று சமரசமான முறையில் செயல்படும் கட்சிகன்ளைத் தொடங்கினார்கள்.

அவை சமூக ஜனநாயகக் கட்சிகள் என்னும் பெயரில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தோன்றின. அவையெல்லாம் சேர்ந்து மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பு இரண்டாவது அகிலம்

178