பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தி நுட்பத்தால் செல்வம் சேர்வதாகச் சொல்லுதல் தகுமோ? என்று கேட்டீர்களானால் அதற்கு விடை கூறுகிறேன். யுத்தம் மிருகத் தொழிலாக இருந்த போதிலும் நல்லோர்களால் எவ்வகையாலும் வெறுக்கத்தக்க இழி தொழிலாக இருந்தாலும் அதற்கு மிருகபலம் மாத்திரம் இருந்தால் போதும் என்று நினைப்பது தவறு யுத்த சாஸ்திரம் என்பது ஒருபெரிய சாஸ்திரம் அதில் மிருகபலம் கருவி: அறிவு கர்த்தா. சாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலே கூடத்தலைவனாக இருப்பவன் சிறந்த புத்திநுட்பமுடையவனாக இருத்தல் இன்றியமையாதது. எத்தனையோ விதமான அறிவுப் பயிற்சிகள் ஆதி காலமமுதலாகவே யுத்தத்திற்கு அவசியமாக ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் தற்கால யுத்தங்களோ பலபலதுறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்ட பண்டிதர்களாலே நடத்தப்படுகின்றன.

வியாபாரம், கைத்தொழில் முதலிய சமாதான நெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்திநுட்பம் எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இக்காலத்தில் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒரு rணம் கூடத்தரித்து நிற்க மாட்டா.

இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகாலமுதல் அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்குக் கல்வி ஏற்படாத படியாக வேலை செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். ‘எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விளக்கி விட வேண்டும்’ என்ற விநோத விதியொன்று மஜஸ்மிருதியிலே காணப்படுகிறது. நம்முடைய தேசத்தில் மட்டுமேயன்று. உலகம் முழுமையிலும் எல்லாநாடுகளிலும் கைத்தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடை பெற்று வந்திருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி எல்லாநாடுகளிலும் முக்கியமாக நமது பாரத தேசத்தில் கைத்தொழில் புரியும் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர் கல்வித் தேர்ச்சியடைந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும் தம்முடைய பரம்பரைத் தொழில்களில் இறங்காமல் சுத்த இலக்கியப் பயிற்சியிலேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.

எனினும் சென்ற ஒரிரண்டு நூற்றாண்டுக்குள்ளே ஐரோப்பா எல்லா வகுப்பினருக்கும் கல்வி பயிற்றும் முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த சர்வஜனக்கல்வியென்னும் கொள்கை ஐரோப்பாவிலிருந்து உலகத்தின் பிற பகுதிகளிலும் தாவி விட்டது. இக்கொள்கையை நமது நாட்டில் நறைவேற்றிவிட வேண்டுமென்று பல புண்ணியவான்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இங்ஙனம் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விலைவுகளாகிய பலவகைப் பட்ட அறிவுப்பயிற்சிகளும் பரவி விடுமானால் அதனின்றும் கைத்தொழிலாளிகள்

186