பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்டும் உரையாயோ - அவர்

விம்மியழவுந்திறங்கெட்டுப் போயினர்’

என்று மனம் குமிரிக் கண்கலங்கிப்பாடுகிறார்.

அந்த மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களைக் கேட்பதற்கு ஆளில்லை. பாரத நாட்டிலோ பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மெளனமாகப் பசிபட்டினியால் செத்து மடிந்தார்கள்.

‘நெஞ்சுபொறுக்கு திலையே - இந்த

நிலைகெட்டமனிதரை நினைந்துவிட்டர்ல்

நெஞ்சுபொறுக்குதிலையே - இதை

நினைந்த நினைந்திடினும் வெறுக்குதிலையே

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்

காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார்

பஞ்சமோ பஞ்சம் என்றே ந்தம்

பரிதவித்தே உயிர்துடிதுடித்துத்

தந்சி மடிகின்றாரோ-இவர்

துயர்களைத் தீர்க்க வோர் வழியிலையே’ என்று மகாகவி நெஞ்சுறுகப்பாடுகிறார். ‘நண்ணிய பெருங்கலைகள்-பத்து

நாலாயிரம் கோடி நயந்து நின்ற

புண்ணிய நாட்டினிலே - இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

என்று மனம் நொந்து அந்தப்பாடலை முடிக்கிறார்

அந்நியர் ஆட்சிகாலத்தில் பாரத மக்கள் பசி பட்டினியால் பல்லாயிரக்கணக்கில் செத்து மடிந்ததைக் கண்டு கேட்டு உள்ளம் உறுகி வள்ளலாரும், மகாகவி பாரதியும் பாடியுள்ளார்கள். அன்னசால்கள் அமைத்து மக்களுடைய படி பட்டினியைப் போக்கும்படி வேண்டினார்கள்.

அந்நிய ஆட்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒப்பந்தக் கூலிகளாகத் தொலைதுார நாடுகளுக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இக்காலத்தில் குறிப்பாக பதினேழு,

210,