பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்கள் நிலப் பிரபுககள், கத்தோலிக்க மதநிறுவனத்தலைவர்கள் மடாலயத்தலைவர்கள் ஆகியோருக்கு எதிராகவும் பட்டினிக் கொடுமைகளுக்கு எதிராகவும் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் இக்கலவரங்களுக்கு நவீன எந்தித் தொழில் அதிபர்களும் முதலாளிகளும் நிலப்பரபுக்களின் எதேச்சாதி காரங்களுக்கெதிரான கலவரங்களுக்குத் தலைதாங்கினார்கள். பலநாடுகளில் மன்னராட்சி முறை வழிக்கப்பட்டும் மாற்றப்பட்டும் மக்கள் பிரதி நிதிகளைக் கொண்ட ஆட்சிகள் அமைந்தன. கத்தோலிக்க மத்திய (ரோமாபுரி) தலைமைக்கு எதிராக பல கலவரங்கள் நடைபெற்று அந்தந்த நாடுகளில் சுதந்திரமான திருச்சபைகள் தோன்றி மக்களிடம் நிலை பெற்றன. பிரிட்டனின் புராட்டஸ்டென்ட் F:Il ஏற்பட்டது. ஜெர்மெனியில்லுதான் சபைஏற்பட்டது. ரஷ்யாவில் அர்த்த டாக்ஸ் ரஷ்ய திருச்சபை ஏற்பட்டது. வேறுசில ஐரோப்பியநாடுகளிலும் தேசிய அளவிலான திருச்சபைகள் ஏற்பட்டன. இதனால் பல கலவரங்களும் படுகொலைகளும் சிலுவையுத்தங்களும் கூட நடைபெற்றன. ஐரோப்பிய நாடுகளின் அரசியலில், மன்னர்கள் நிலப்பரபுக்கள், மத, மட நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்தும் அவை நீக்கப்பட்டும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய ஆட்சிகள் ஏற்பட்டன.

நவீன எந்திரத் தொழில் முதலாளிகள் ஆதிக்கம் அதிகமாயிற்று புதிய எந்திரத்தொழில்கள் பரவியதால் பழய கைவினைத் தொழில்கள் அழிந்து பல்லாயிரக்கணக்கான பல லட்சக்தணக்கான தொழிலாளர்களும் கிராம்ப்புறமக்களும் வேலையிழந்து தெருவில் தள்ளப்பட்டார்கள். பசி பட்டினியால் அவர்கள் அவதிப்பட நேர்ந்தது. பெரும் அளவில் பட்டினி ஊர்வலங்களும், கிளர்ச்சிகளும், கலவரங்களும், ஏற்பட்டன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிறநாடுகளுக்கு குறிப்பாக தென்ஆப்பரிக்காநாடுகள் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, வட அமெரிக்கா, கானடா முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் அங்குள்ள உள்நாட்டு சுதேசி மக்களைக் கொன்று குவித்து இன அழிப்பு செய்து ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் குடியேறினார்கள். இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கானடா, வட அமெரிக்காவில் பூர்வீகமக்கள் ஆங்கிலேயர்களின் இனஅழிப்புக்கொள்கையால் அழிந்தே போனார்கள் வட அமெரிக்காவில் ஆங்கிலேயர் மட்டு மல்லாமல் இதா ஐரோப்பியர்களும் குடியேறினார்கள். ஆனாலும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நீடித்தது. வட அமெரிக்காவின் தொற்பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருந்தபகுதிகளில் ஐரோப்பியர்கள் அதிகமாக ஆங்கிலேயர்கள், தென் ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்ந்து வந்த கருப்பு இனமக்களை அடித்து அடிமைப்படுத்தி விலங்கிட்டு வட அமெரிக்காவிற்குக் கொண்டு அடிமைகளாக வேலைக்கு அமர்த்தினார்கள்.

211