பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதரப்புகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. நாஜி படைகள் சோவியத் யூனியன் எல்லைகுள் வெகு தொலைவு முன்னேறிவிட்டது.

நாஜி படைகள் லெனின் கிராட், மாங்கோ, ஸ்டாலின் கிராரு நகர எல்லைகளை நெருங்கி விட்டது. அந்த எல்லைகளில் நாஜி படைகள் தடுத்து நிறுத்தப் பட்டன. சோவியத்யூனியன் எல்லைக்குள் 40 சதவீத விலை நிலம் 60 சதவீத தொழில் பகுதிகள் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் வந்துவிட்டன. நாஜி படைகள் ஆக்கிரமித்தபகுதிகளைப் பயன்படுத்த முடியவில்லை. மக்களுடைய எதிர்ப்பு கடுமையாக இருந்தது. சோவியத் மக்களின் தேசபக்த உணர்வு உச்சத்திற்குச் சென்றது. நாஜிப்படைகள் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்படைகளால் முன்னேறமுடியவில்லை. உலக வரலாற்றில் இப்படிப் பட்ட உக்கிரமமான போர், போர்ச் சேதங்கள், போர் அழிவுகள், போர் நாசங்கள் இதுவரை ஏற்பட்டதில்லை.

ஐரோப்பா முழுவதையும் பிரான்ஸ் உட்பட நாஜி ஜெர்மடைகள் கைப்பற்றியிருந்தது. பிரிட்டன் மீது (லண்டன்) குண்டுகள் பேய் மழையாகப் பெய்து கொண்டிருந்தது அந்த மண்ணுக்குள் நாஜி படைகள் செல்ல வில்லை. அமெரிக்க ஐக்கியநாடுகள் தனது மண்ணுக்கு வெளியில் இருந்துதான் நடத்திக் கொண்டிருந்தது ஆயினும் எல்லாநாடுகளுக்கும் அளவு கடந்த பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. கிழக்கில் சீன மண்ணில் ஜப்பான்புகுந்தது. சீனக்கம்யூனிஸ்ட் படைகள் தேசியப் பட்கள் ஜப்பான்ை எதிர்த்து கடும் போர் நடத்தியது.

1945-ஆம் ஆண்டில் நேச நாடுகள் வெற்றிபெற்றன. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், சோவியத் யூனியன் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் வெற்றி பெற்ற நாடுகளின் தலைவர்கள் நாஜி ஜெர்மனி, பாஸிஸ்டு இத்தாலி, ஜப்பான் தோல்வியுற்று சரணாகதியடைந்தனர்.

சோவியத் படைகள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின்வரை சென்று பெர்லின் நகரைக் கைப்பற்றி ரிச்ஸ்டாக் என்றும் பெயருள்ள ஜெர்மன் பாராளுமன்றத்தின்மீது சோவியத் யூனியன் தனது வெற்றிக் கொடியை நாட்டியது 1945 ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்குவந்தது.

இரண்டாவது உலகப் பெரும் போர் முடிந்த போது சோவியத் யூனியன் படைகள் நாஜிப்படைகளைதுரத்திக் கொண்டு பெர்லின் வர்ைசென்றபோது இடைப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நாஜிப்படைகளிடமிருந்து விடுவித்துக் கொண்டு சென்ற போது போலந்து, செக்கோஸ்லோ வேகியா, ஹங்கேர், பல்கேரியா, குமேனியா, அல்பேனியா ஆகிய நாடுகளில் தொழிலாளர்கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. லிது வேனியா எஸ் டோனியா லாட்விலா ஆகிய நாடுகள் நாஜி படைகளிடமிருந்து விடுதலை பெற்று

218