பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனுடைய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதன் அந்தஸ்து பலமாக உயர்ந்திருக்கிறது.

கோஷ்டடிசேராநாடுகள் (நடுநிலை நாடுகள்) இயக்கம்.

ஒருபக்கம் சோவியத் யூனியன் சார்புநாடுகள் மறுபக்கம் அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ முதலிய கூட்டு நடுகள் இந்த இருகோஷ்டிகளும் உலக அளவில் தங்கள் ராணுவபலத்தையும் ஆயுதபலத்தையும் பொருளாதார பலத்தையும் பெருக்கிக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கில் இதர நாடுகளைத் தக்க வதைத்கு கொள்ளவும் கடுமையான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இந்த இரு கோஷ்டிகளுடனும் சேராமல் சுயேச்சையாக கோஷ்டிசேரா (நடுநிலைநாடு) நாடுகள் இயக்கம் பிறந்து வளர்ந்து இந்தியா இந்தோனேஷியா, யுகோஸ்லாவியாஎகிப்து, முதலிய நாடுகள் மற்றும் புதிய ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்த நடு நிலை நாடுகளின் இயக்கத்தில் ஊக்கத்துடன் பங்கு கொண்டது. இந்த இயக்கத்தில் இந்திய முக்கிய பங்கு எடுத்துக் கொண்டு முன்னனியில் இருந்தது. இந்தியப் பிரதமர் இந்த ஒரு நிலை நாடுகளின் முன்னனித்தலைவரகளில் ஒருவராக உலகப் புகழ்பெற்று விளங்கினார். நடுநிலை நாடுகள் அமைப்பில் அங்கம் வகித்த நாடுகளில் பெரும்பாலானவை விடுதலைப்போராட்டத்தை நடத்தி அண்மையில் உதந்திரம் பெற்றவை. இயல்பாகவே ஏகாதிபத்ய எதிர்ப்பு குணம் படைத்தவை. ஆயினும் பல்வேறு அரசியல் பொருளாதார கலாச்சாரக் காரணங்களில் தங்கள் பழைய ஆக்கிரமிப்பு நாடுகளுடன் பல்வேறு துறைகளில் நெருக்கமானவை. ஆயினும் தங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சியை உத்தேசித்து சுயேச்சையான சுதந்திரமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க விரும்பம் கொண்டவை. தங்கள் நாட்டை ஆட்சி நடத்திய பழைய நாடுகளின் அதிகாரிகளைக் காணும் போது மிகுந்த மரியாதை கொள்பவர்கள். அதே சமயத்தில் சுதந்திரமான உணர்வு கொண்டு தங்கள் சொந்த உணர்வில் தங்கள் நாட்டின் சுதந்திரத்தையும் கவுரவத்தையும் அந்தஸ்தையும் பழைய பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிட்க்க விருப்பம் கொண்டவர்கள் இவ்வாறு ஆர்வம் கொண்டவர்கள் பலரும் இருந்தார்கள். தங்களை நாட்டு கவுரவத்தை உயர்த்தவிரும்பியவர்களும் இருந்தார்கள்.

ஒரு தடவை ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்தில் நமது நாட்டுதுதர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நமது தூதரகங்களை நிர்வகிக்கும் போது அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டுதுதர்களில் ஐரோப்பிய ஆநட்டினர் என்றால் அவர்களிடம் நெருங்கிப்பழகுகிறார்கள். ஆசிய ஆப்பிரிக்க சிறய நாடுகளின் தூதர்கள் என்றால் அதிக நெருக்கமாகப் பழகுவதில்லை என்று நமது குறையை சுட்டிக் காட்டி எழுதியிருந்தது. அந்தக் குறை இப்போதும் கூட

222