பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலரிடம் காணப்படுவதைக் காண்கிறோம்.

இதில் ஆசிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமையுணர்வையும் பாஸ்பா அனுதாபம் ஆதரவு உணர்வுகளையும் காட்ட வேண்டும். இரு நாடுகளும் அடிமைப்பட்டு துன்பதுயரங்களை அனுபவித்தவர்கள் என்னும் முறையில் பரஸ்பர ஆதரவைக் காட்ட வேண்டும் என்பது ஒரு முக்கியமான உணர்ச்சி பூர்வமான் அம்சமாகும்.

இவ்வாறு புதிதாக விடுதலை பெற்றநாடுகளுக்கிடையில் பரஸ்பர ஆதரவு மரியாதை ஒற்றுமை உணர்வு சகோதர உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்கு உயர்த்திக் கொள்வதற்கும் இந்த நடுநிலைநாடுகளின் ஒற்றுமை இயக்கம் உதவிற்று கூறலாம்.

ஒருபக்கம் இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்து அவதிப்பட்டவர்கள், இப்போது தாங்கள் நாடுகளை கல்வி தொழில் விவசாயம் வாணிபம் முதலியவற்றில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல விரும்புபவர்கள். தங்கள் ஆண்ட நாடுகளால் இன்னும் புறக்கணிக்கப்படுபவர்கள். அத்துடன் ஆங்கிலோ அமெரிக்க வளர்ச்சியடைந்த நாடுகளாலும் புறக்கணக்கப்படுபவர்கள் ஒதுக்கப்படுபவர்கள், எனவே தங்களுக்குள் எந்த அளவுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ள முடியும் என்று விரும்பம் கொண்டிருப்பவை. அத்துடன் இந்த நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் அரசியல் பொருளாதார கலாச்சாரப் பாரிவார்த்தனை வாணிபத் தொடர்புகளை விஸ்தரித்துக் கொள்ளுதல் முதலியவற்றில் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுதல் முதலியவற்றிலும் நல்லுறவை வ்ளர்த்துக்கொள்ளுவது முதலியவற்றில் சேர்ந்து பணியாற்றுதல் பாஸ்பரம் ஆதரவு தெரிவித்தல், இன்னும் விடுதலைபெறாத நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தல் ஆகியவைகளும் அவர்களுடைய விவாதங்களிலும் தீர்மானங்களிலும் இடம் பெற்றன.

H

ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொது வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான தேவைகள், 1. முதலீட்டு வசதி, 2. தொழில் நுட்ப ஞானம், 3. ஆள்பலம் - மனிதவளம் 4. சந்தை வாய்ப்பு வசதிகள் ஆகியவை முக்கியமானவை. இதில் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளிடம் முதலீட்டு வசதியும் தொழில் துட்ப வசதியும் குறைவு. இவை களில் மூல நாடுகள் உதவிசெய்ய மறுக்கின்றன அல்லது தாமதப்படுத்துகின்றன. இந்தத்துறைகளில் பரஸ்பரம் உதவி செய்து கொள்வதற்கும் நடுநிலைநாடுகளின் அமைப்பு உதவிகரமாக இருந்தது.

நடுநிலைநாடுகளின் அமைப்பு அண்மையில் விடுதலை பெற்ற நாடுகளின் அமைப்பாக இருந்தால் இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணம் படைத்ததாக இருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டும் தங்களுக்கும் நடபுறவு நாடு தேவை என்ற சோவியத் யூனியன்

223