பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் போரில் சோவியத் யூனியனின் உயிரிழப்பு (ஆட் சேதம்) மட்டும் மூன்று கோடிக்கும் அதிகம். ஏற்கனவே 1917 பிப்ரவரி புரட்சியிலும் அக்டோபர் புரட்சியிலும் பின்னர் நடைபெற்ற பதினான்கு நாடுகளின் தலையீட்டு யுத்தத்திலும் உள்ளநாட்டுக் கலவரங்களிலும் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களைப் ப்ற்றி முன்னர் பார்த்தோம் அத்துடன் விவசாயிகளின் கூட்டுப்பண்ணைகள் அமைக்கப்பட்ட காலத்தில் கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் சோமறுத்தவிவசாயிகள் பலரும் கூலிக்குள் என்று கூறி வர்க்கப் போராட்டம் என்று கூறி ஸ்டாலின் நிர்வாகத்தில் விவசாயிகள் பலரும் கொல்லப்பட்ட செய்தியும் மனதை உறுக்குவதாகும். இவ்வாறு ரத்தக்கரை படிந்த வரலாறு மூலம் ரஷ்யப் புரட்சி நடந்து முடிந்து உலகப் போரும் முடிந்து அதன்பின்னர் ரஷ்யமக்கள் சொல்லொணரத்துன்பதுயரங்களை அனுபவித்து ஓரளவு அமைதியான வாழ்வைப் பெற்றார்கள் என்று கூறலாம்.

இரண்டாவது உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றிபெற்றதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கட்சிகளின்ஆட்சி ஏற்பட்டதும், சீனாவின் புரட்சிப் படைகள் வெற்றிபெற்று 1949-ஆம் ஆண்டில் மக்கள் சீனக் குடியரசு என்னும் பெயரில் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. பெ ட கொரியா வடக்கு வியத்நாம் பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் ஏற்பட்டதும் சோவியத் யூனியன் மற்றும் தொழிலாளர் இயக்கங்களின் கவுரவத்தையும் உலக அளவில் உயர்த்தியது.

உலகின் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் தோன்றின. சுமார் 80 நாடுகளில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கட்சிகள் தோன்றிவளர்ந்தன. அவைகள் மார்க்சிஸம், லெனினிஸ் தத்துவத்தையும், பாட்டாளி வர்க்க சர்வதேசீயத்தையும் தங்கள் கட்சிகளின் அடிப்படை சித்தாந்தங்களாக அறிவித்தன. கம்யூனிஸ் இயக்கம் உலகப் போரியக்கமாக வளர்ச்சிபெற்று வெளிப்பட்டது. மார்க்சிலம், லெனினிஸம் உலகின் முக்கியமான தத்துவமாக சித்தாந்தமாக பிரகடனம் செய்யப்பட்டது.உலகின் பல நாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் மார்க்சிலம் லெனினிஸ் தத்துவங்கள் பாடப் பொருளாகவும் கூட எடுத்துக் கொள்ளப்பட்டன.

1956-57-ஆம் ஆண்டுகளில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உலகில் எதிர்காலத்தில் உலகப் போரைத் தவிர்த்தல், உலகசமாதானத்தை நிலை நாட்டுதல், அணு ஆயுதங்களைத் தவிர்த்தல், சமூதாயப்புரட்சிக்கு ஆயுதப் போர் இன்றி அமைதி யான வழிகளுக்கான வாய்ப்புகளைக் காணுதல், சோஷலிஸ் உலக மார்க் கெட்டை விரிவு படுத்தல், வேறுபட்ட சமுதாய அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சக வாழ்வு, சோஷலிஸ் நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு, விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தல் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் சம அந்தஸ்தின் அடிப்படையில் ஒனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பு,

225