பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோஷலிஸ் உலக அமைப்பை பலப் படுத்துவது முதலிய பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் நடந்த போது, இவைகளில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுத்தன. வேறு சில கட்சிகளும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டன. அப்போது எல்லாநாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரதி நிதிகளும் கூடி ஒரு பொது விவாதம் நடத்தி கருத்தொற்றுமை காண்பதற்கு முயற்சிப்பது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 1960 ஆம் ஆண்டில் 81 நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கட்சிகளின் பிரதிநிதகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு 29 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு கட்சிக்கும் பெரிய கட்சி சிறய கட்சி என்ற வித்தியாசமில்லாமல் அவர்கள் விருப்பப் படி எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டது ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளும் தங்களுக்கு தேவைப்பட்ட நேரம் எடுத்துக் கொண்டு முழுமையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். கடைசியாக ஒரு ஒருமனதான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக்கட்சியின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் ஐந்து பிரதிநிதகள் சென்றிருந்தனர் அவர்கள் ஐவரும் ஒரு மனதாகக் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டார்கள். அப்போது இந்திக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட ஒரே கட்சியாக இருந்தது.

அந்த அறிக்கையின்படி

1. உலகின் நிரந்தர சமானதானத்திற்காக அனைத்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் பாடுபட வேண்டும்.

2. வேறுபட்ட சமூதாய அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகவாழ்வுக் கொள்கை அனுசரிக்க வேண்டும்.

3. அணு ஆயுதங்களை போர்களில் எந்த நாடும் பயன்படுத்தக்கூடாது.

4. எந்த ஒரு நாடும் அடுத்தநாட்டு உள் நாட்டுப்பிரச்சினைகளில் தலையிடுதல் கூடாது.

5. நாடுகளுக்கிடையில் ஏற்படும் எந்த பிரச்சினைகளையும் தாவாக் களையும் சமாதான மான முறைகளில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

6. உலகில் இப்போது சம நேரான இரண்டு சந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று முதலாளித்வசந்தை, இரண்டாவது சோஷலிஸ்சத்தை - இரண்டு சந்தைகளுக்குமிடையில் போட்டி உள்ளது. கோஷலிஸ் சந்தை உலகப் போட்டியில் முன்னேறிச்செல்வதற்கு சோஷலிஸ்

226