பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலைகின்றது.

அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையையும் இந்நாளிலே ஆண் மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ‘நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே’ என்று மனம் குமுறுகிறது. -- o

‘நமது பத்திரிகை படிக்கும் நேயர்கள் அனைவரும் நாம் செந்தமிழ் பத்திரிகையிலிருந்து பெயர்த்துப் பதிப்பித்திருக்கும் உபந்நியாசத்தைத் தாம் பலமுறை படிப்பது மட்டுமேயன்றித் தமது சுற்றத்தாருக்கும் மித்தரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும் திரும்பத் திரும்ப படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிறேன்.

‘மகனைப் பெற்று விடுதல் எமது கடமை அவனைத் தக்கோன் ஆக்குதல், அவன் தந்தையின் கடமை. அவனுக்கு வேல் செய்து கொடுத்தல் இரும்புக் கொல்லனது கடமை. என் மகனது கடமை எனிலோ யுத்தத்திலே சென்று யானையைக் கொன்று மீறுதல் ஆகும்’ என்று ஒர் தமிழ்த்தாய் பாடியிருக்கிறாள்.

‘இனி மற்றொரு தாய்’, எனது மகன் யுத்த களத்திலே போர் வீரர் வாளினிலே கழுத்தறுப்புண்டு மடிவானால் அது தான் எனக்கு ‘மேலான தர்மம், அதுவே ஹத்கர்மம்’ என்று பாடினாள் பின்னுமொரு பெண் புலவர் தமது சுற்றத்திலுள்ள ஓர் அம்மை தன் மகன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் இறந்தான் என்று கேள்வியற்று, நான் அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்த சிறப்பைக் கண்டு வியந்து பாடல் சொல்லியிருக்கிறார்.

அப்பால் ஒரரு தமிழ்த்தாய் தனது தந்தையும் கணவனும் போலிலே சிறிது காலத்திற்கு முன்பு இறந்து போயிருக்கவும் யுத்தப் போறையின் ஒலி கேட்டவுடனே சந்தோஷம் மிகுந்துதன் மகனுக்கு நல்ல ஆடையுருத்தி அவன் குடுமிக்கு எண்ணெயிட்டுச் சீவி முடித்து அவன் கையிலே வெலெடுத்துக் கொடுத்து தனது ஒரே பிள்ளையைப் போர் களத்திற்குப் போ என்று அனுப்பிய பெருமையை ஒர் பெண் புலவர் வியந்திருக்கிறார். பின்னுமொரு தாய் தன் மகன் யுத்த களத்திலே வலியிழந்து புறங்கொடுத்து ஓடியது உண்மையாயின் ‘அவன் பாலுண்டு வளர்ந்ததற்கு காரணமாயிருந்த என் முலைகளை அறுத்திடுவேன்’ என்று வளைக் கையிலே கொண்டு போர் களத்திற்குப் போய் அங்கே வீழ்ந்து கிடக்கும் பினங்களை வாளினால் புரட்டித் தேடுகையிலே அப்பினங்களிடையில் தன் மகன் உடலும் இரண்டு துண்டமாகக் கிடப்பதைப் பார்த்து அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்தாள் என்று ஒர் பாடல் இருக்கிறது.

248