பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் அது போல எத்தனையோ ஆச்சர்யமான திருஷ்டாந்தங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இடம் போதாமை பற்றி அவற்றை இங்கே எடுத்துக் கூற முடியவில்லை.

‘இவ்வளவு மேலான வீரப் பயிற்சி இருந்த நாடு இப்போது என்ன நிலைமைக்கு வந்து விட்டது”. ஆனால் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. அதுவும் வீணான ஆறுதலன்று உண்ை மப்பற்றி ஆறுதல்.

அந்த ஆறுதல் யாதெனில், நமது ஜாதியை இடையே பற்றிய சிறுமை நோய் விரைவிலேயே நீங்கி விடும் என்பதற்கு ஆயிர்க்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமான நெஞ்சமும் தெய்வ பக்தியும் தன்னலமறுப்பும் உடைய பல மேலோர்கள் இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்தபுன்னோய் சீக்கிரத்தில் மாறிப் போய்விடும். வானத்திலே துந்து பிபோல் அதிரக் கேட்கிறோம். மகாபாரதம் .......... பிறந்து விட்டது. வந்தே மாதரம் என்று மகாகவி பாரதியார் அக்கட்டுரையை முடிக்கிறார்.

சங்கம் வைத்து தமிழை வளர்த்தது மதுரை. அம்மாமதுரையில் கடைச்சங்கம் இருந்து புகழ் பெற்றுத் திகழ்ந்தது. அதன் பின்னர் அந்நியப்படையெடுப்பு களாலும் அந்நிய ஆட்சியாலும் தமிழ் சங்கத்தை ஏரிட்டுப் பார்ப்போர் யாருமில்லை. 19ம் நூற்றாண்டில், இராமநாதபுரம் சீமையை ஆண்ட பாண்டித்துரைத்தேவர் தமிழ் ஆர்வமும் தமிழ் பற்றும் மிக்கவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழ் படிப்பும் தமிழ் வளர்ச்சியும் மங்கிக் கிடந்தது. அந்நிய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய மொழிகளின் சிறப்புகளை அறிந்தவர்களல்ல. இந்திய மொழிகள் எல்லாம் நாகரிக இல்லாத அரைக்காட்டு ஜனங்களின் மொழி என்று கருதியிருந்தார்கள். அவர்களில் ஒரிருவர்தான் தமிழ் மொழியின் சிறப்பைப் அறிந்து தமிழைப் படித்து தமிழ் அறிஞர்களாக இருந்தனர்.

அந்நிய ஆட்சியின் காரணத்தால் தமிழ் படிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில் மதுரையில், இராமநாதபுரம் அரசர் பாண்டித்துரைத் தேவர் முன் முயற்சியில் பரிதிமால் கலைஞர் என்று தனது சூரிய நாராயண சாஸ்திரியார் என்னும் இயற்பெயரை தமிழில் மாற்றிக் கொண்ட தமிழ் அறிஞர், திரு. நாராயண அய்யங்கார் என்னும் பெயர் கொண்ட தமிழ் பேரறிஞர் ஆகியோரது முன் முயற்சியால் தமிழ் சங்கம் என்னும் பெயரில் கல்லூரி அமைக்கப்பட்டு, தமிழ் மொழியில் பிரவேச பண்டிதம் பால பாண்டிதம், பண்டிதம், மகா பண்டிதம் என்னும் பட்டப் படிப்புகளை ஏற்பாடு செய்து பலர் அங்கு படித்து தமிழ்ப் பண்டிதர்களானார்கள்.

அந்தக் கல்லூரியை நிறுவ நிதி தேவைப்பட்டது. அதற்காக மதுரை - மக்களிடம் நிதி திரட்டுவதற்காக பல அறிஞர்கள் முயற்சித்தனர். அப்போது

249