பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாரமற்ற வார்த்தை - மேலே

சரிதை சொல்லுகின்றோம்”

என்று மகாகவி பாடுகிறார்.

மிகவும் உயர்வான உலகிற்குப் பொருத்தமான உண்மை நிறைந்த கருத்துக்களை மகாகவி வலுவாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். மகாகவி பாரதியின் அரசில் கருத்துக்களை மிகவும் தெளிவாக இந்தப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.

ஐவர் தங்களையும் பணயமாக வைத்து இழந்த பின் பாஞ்சாலியைப் பணயமாக வைத்து இழந்தது பற்றி, கவிஞர்,

‘செருப்புக்குத் தோல் வேண்டியே

-இங்குக் கொல்வரோ

செல்வக் குழந்தையினை?

விருப்புற்ற சூதினுக்கேன ஒத்த பந்தயம்

மெய்த்தவப்பாஞ்சாபியோ?

ஒருப்பட்டுப் போனவுடன்- கெட்ட மாமனும்

சன்னியத்தாயம் கொண்டே

இருபகடை பேடென்றான்

பொய்மைக் காய்களும்

இருபகடை போட்டவே’

என்று மகாகவி தனது பாடலில் குறிப்பிடுகிறார். அற்புதமான கருத்து மிக்க கவிதையாகும்.

சூதில் பாஞ்சாலி பணயமாகி தோல்வியுற்ற பின்னர், பாஞ்சாலியை அரச சபைக்கு அழைத்து வரும்படி துரியோதனன் ஆணையிடுகிறான். அப்போது உலகில் தர்மக் குழப்பம் ஏற்படுவதாக மகாகவி பாரதி ஒரு அருமையான அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறார்.

இதுபோன்ற காட்சியை உலகில் எந்தக் கவிஞனும் காட்டவில்லை. இது பாரதிக்கேயான தனிச்சிறப்பாகும்.

‘தருமம் அழிவெய்திச் சத்தியமும் பொய்யாகிப்

பெருமைத் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக

வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய

34