பக்கம்:மதன கல்யாணி-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மதன கல்யாணி

கண்ட மைனர் பெரிதும் சந்தோஷம் அடைந்தவனாய் நாற்புறங் களையும் உற்று நோக்கி அது எந்த இடம் என்பதை ஆராய்ந்து பார்த்தான். அது ஆலந்துர் பாதை போலத் தோன்றியது. அந்த பங்களா மோகனாங்கி இருந்ததாகப் பொன்னம்பலம் காட்டிய பங்களப் போல இருந்தது. அவன் மிகவும் ஆச்சரியம் அடைந்த வனாய் தான் வழி தப்பித் திரும்பவும் கருப்பாயின் வீட்டண்டை யிருந்த மோகனாங்கியின் மாளிகை வாசலை அடைந்து விட்டதாக நிச்சயித்துக் கொண்டான். தான் அதைவிட்டுப் போய்விட வேண்டும் என்று முயன்றாலும், அந்த இடமே திரும்பவும் குறுக்கிட்டதை நினைந்து மைனர் மிகவும் சஞ்சலமும் கவலையும் கொண்டு பங்களாப் பக்கம் திரும்பி அதை உற்று நோக்கினான். அப்போது, பங்களாவின் உள்ளே இருந்த வாசஸ்தானத்தின் வெளிக்கதவண்டை வெளிச்சம் தெரிந்தது. “இப்போது மணி இரண்டிருக்கும். இந்தச் சமயத்தில் வாசலில் வெளிச்சம் தெரிய வேண்டிய காரணம் என்ன? இன்றிரவு ஏதாவது நாடகம் இருக்குமோ? வி.பி. ஹாலிலிருந்து மோகனாங்கி ஒரு வேளை இப்போதுதான் பங்களாவுக்கு வந்திருப்பாளோ” என்று அவன் பலவாறு சிந்தனை செய்யத் தொடங்கினான். மோகனாங்கியின் மீது அவன் கொண்டிருந்த மையல் திரும்பவும் தலையெடுத்தது. அவனது கண்ணோக்கம் தானாகவே பங்களாவிற்குள் சென்றது. பாட்டைக்கு அருகில் இருந்த இரும்புக் கம்பிக் கதவண்டை அவன் நின்று கொண்டு, உள்ளே தோன்றிய விளக்கின் வெளிச்சத்தை நன்றாகக் கவனித்தான். உள்ளே கட்டிடத்தின் வாசலில் காணப்பட்ட வெளிச்சம், மரங்களின் வழியாக இரும்புக் கதவை நோக்கி நகர்ந்து வருவதாகத் தோன்றியது.

யாரோ அந்த விளக்கைத் தமது கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்ததை மைனர் கண்டான். வெளிச்சம் சமீபத்தில் வரவர, அதைக் கையில் வைத்திருந்தது ஒரு கிழவி என்பதை அவன் கண்டு கொண்டான். அவள் ஒரு வேலைக்காரியைப் போலக் காணப்பட்டாள். அந்த அகால வேளையில் தான் அங்கே இருப்பதைக் கண்டு அவள் கூச்சலிடுவாளோ என்ற அச்சம் ஒரு புறத்தில் அவனை வதைத்தது. தனிமையில் வந்த அந்த கிழவி யோடுதான் நேரில் பேசினால், ஒருகால் அது தனக்கு அனுகூலமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/100&oldid=646972" இலிருந்து மீள்விக்கப்பட்டது