பக்கம்:மதன கல்யாணி-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83

முடியுமோ என்ற சபலமும் இன்னொரு புறத்தில் வதைக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் கிழவி இரும்புக் கதவண்டை நெருங்கி வந்தவள் அதை திறக்காமல், தான் வந்த வழியே திரும்பிப் போக ஆரம்பித்தாள். அதைக் கண்ட மைனர் விரைவாக நடந்து கதவண்டை நெருங்கி நின்று தணிவான இனிய குரலில், “பாட்டி! ராத்திரி இரண்டு மணி இருக்குமே! இப்போதுதான் தோட்டத்தில் உலாவுகிறதா?” என்றான்.

எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்ட கிழவிதிடுக்கிட்டுத்திகைப்பும், அச்சமும் கொண்டு தனது கையிலிருந்த லாந்தரை இரும்புக் கதவுப்பக்கம் திருப்பிய வண்ணம் வெளிப்புறத்தில் நோக்கி, அங்கே ஆடம்பரமாக உடையணிந்து, வயிரப் பொத்தான்கள் பளிர் பளிரென்ன மின்ன நின்று கொண்டிருந்த மைனரைக் கண்டு, அவன் யாரோ பெரிய மனிதன் வீட்டுப் பிள்ளை என்று உடனே யூகித்துக் கொண்டு “ஒரு நாளும் இல்லாமல் இந்த அகாலத்தில் வந்து நின்று கொண்டு திடீரென்று கூப்பிட்டு என்னை நீர் பயமுறுத்திவிட்டீரே இந்த அகாலத்திலே தான் மனிதர் வழி நடக்கிறதா? அப்படி வழி நடந்தாலும், பக்கத்தில் உள்ள வீடுகளில் இருப்பவரை எல்லாம் கவனித்து அவரிடம் யோக கூேடிமம் விசாரிக்கும்படி, எந்த நியாயம் சொல்லுகிறது?” என்று நகைத்த வண்ணம் வேடிக்கையாகக் கேட்டாள். அவளது மகிழ்ச்சியைக் கண்ட மைனர், அவள் தன்னோடு அதிகமாகப் பேச்சுக் கொடுக்க விரும்புகிறாள் என்று யூகித்துக் கொண்டு, “நீ இந்தக் கேள்வி கேட்பாய் என்பது எனக்குத் தெரியும். இந்த நடு ராத்திரியில் பிரயாணம் செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரிந்தும், முட்டாள் தனமாகப் புறப்பட்டு வந்ததன் பலன் கைமேல் பலித்துவிட்டது. நான் ஆலந்துரிலிருந்து சைதாப்பேட்டைக்குப் போகலாம் என்று புறப்பட்டு வந்தேன். இப்போது விடியற்காலம் என்று நினைத்து வந்துவிட்டேன்! வந்த இடத்தில் திருடர்கள் சூழ்ந்து கொண்டு என்னை அடித்துப் போட்டு விட்டு மூவாயிரம் ரூபாய் நோட்டுகளையும், கடுக்கன்கள் மோதிரங்கள் முதலிய சாமான்களையும் கொண்டு போய் விட்டார்கள். இதோ சமீபத்திலே தான் அந்த வழிப்பறி நடந்தது. திரும்பி ஆலந்துர் போகலாம் என்று இப்படி வந்தேன்; தற்செயலாக இங்கே திரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/101&oldid=646973" இலிருந்து மீள்விக்கப்பட்டது