பக்கம்:மதன கல்யாணி-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9%

சாயுஜ்ய பதவியையும் மனதில் பாவித்தவனாய் மதிமயங்கி, மூளை குழம்பி வாசற்படி மேல் வைத்த தனது விழியை வாங்காமல் உட்கார்ந்திருந்த போது அவனுக்கெதிரில் ஓர் அழகிய மங்கை தோன்றினாள். அவளது வயது பதினெட்டிருக்கலாம். அழகிய சிவந்த மேனியும், வசீகரமான முகமும் பெற்று, உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்திருந்த அந்த மடமாது புன்னகையும், குளிர்ச்சியும், அன்பும் கிரணங்களாகச் சொரிந்த சந்திர பிம்பம் போன்ற முகத்தோடு அவனிடம் நெருங்கி, தனது கைகளை எடுத்துப் பணிவாக ஒரு கும்பிடு போட்டு அவனை வாங்கினாள். அவளைக் கண்டு முற்றிலும் திகைப்படைந்த மைனர் அவள் மோகனாங்கியின் தங்கையோ என்று ஐயமுற்றவனாய், அவளை நோக்கி மகிழ்ச்சியும் புன்னகையும் காட்டி, தனது கம்பீரமான தலை அசைப்பால் அவளது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவனாய் மெளனம் சாதித்தான். அங்கே வந்த அந்தப் பெண் பாவை சிறிது துரத்தில் இருந்த ஒரு மேஜையின் மீது இருந்த வாசனைத் தாம்பூலங்கள் குழம்புப்பால் முதலியவற்றைக் காட்டி, “இந்த மேஜைக்குச் சமீபத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளு கிறது தானே! தாம்பூலம் தங்களை வருத்தி அழைக்கிறதே” என்று மிகுந்த உற்சாகத்தோடும் சந்தோஷத் தோடும் கூற, அதைக்கேட்ட மைனர், “அதற்கென்ன ஆகட்டும். நான் எந்த தெய்வத்தை நாடி வந்தேனோ அது இன்னமும் தரிசனம் கொடுக்கவில்லையே. அந்த ஆனந்தத்தை அடைந்த பிறகு, தாம்பூலத்தை மறக்கவா போகிறோம்” என்றான். அவனது சொல்லைக் கேட்ட அந்தப் பூங்கொடியின் முகம் சடக்கென்று மாறுபட்டது. அவனுக்கருகில் நெருங்கி நின்று தனது அழகிய பல் வரிசையில் சிறிதளவு வெளியில் தெரியும்படி அழகாக நகைத்த வண்ணம், அந்த பெண் அவனை நோக்கி, “இந்த வீட்டின் எஜமானியோடு தாங்கள் சிநேகம் செய்து கொள்ளப் பிரியப்படுவதாக, வேலைக்காரியிடம் தாங்கள் சொன்னிகள் அல்லவா?” என்றாள்.

மைனர்:- ஆம்; சொன்னதுண்டு; எஜமானி இன்னமும் வர வில்லையே! - என்றாள்.

அதைக் கேட்ட மங்கை, “நான் தானே இந்த வீட்டு எஜமானி. தாங்கள் ஒருகால் வேறே யாரையாகிலும் தேடிவந்து அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/109&oldid=646988" இலிருந்து மீள்விக்கப்பட்டது